தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pugazh: இன்னொரு உயிர்.. முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன புகழ்

Pugazh: இன்னொரு உயிர்.. முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன புகழ்

Aarthi V HT Tamil
Sep 01, 2023 11:08 AM IST

குக் வித் கோமாளி புகழ் தான் தந்தையாகி இருப்பதாக அறிவித்து உள்ளார்.

புகழ்
புகழ்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர் அஜித்தின் , ' வலிமை ' மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான , ' எதற்கும் துணிந்தவன் ' படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது.

புகழ், பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமாகி ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் தான் தந்தையாகி இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டு உள்ளார் புகழ். 

அவர் கூறுகையில், "என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள். இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை. என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்