தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ajithkumar:கடைசி வரை நின்ற அம்மா; நன்றி கூறிய அஜித்..சோகக்கடலில் மின் மயானம்!

AjithKumar:கடைசி வரை நின்ற அம்மா; நன்றி கூறிய அஜித்..சோகக்கடலில் மின் மயானம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 24, 2023 06:01 PM IST

மின் மயானத்தில் தந்தையின் உடலை தகனம் செய்த அஜித் அங்கிருந்து புறப்பட்டார்

நன்றி கூறிய அஜித்
நன்றி கூறிய அஜித்

ட்ரெண்டிங் செய்திகள்

நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்
நேரில் வந்து அஞ்சலி செலுத்திய விஜய்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். நடிகர் விஜயும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து அஜித் தந்தைக்கு இறுதிச்சடங்கை செய்த நிலையில் அவரது உடலானது பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆம்னி வேனில் கொண்டு செல்லப்பட்டது. மின் மயானத்தின் வாசலில் இருந்து தந்தையின் உடலை அஜித்தே சுமந்து சென்றார்.

அவருடன் அவரது சகோதரர்கள், அஜித்தின் அம்மா, மனைவி ஷாலினி, திரைபிரபலங்கள் பலரும் மின் மயானத்திற்கு வருகை தந்திருந்தனர். அஜித்தின் தந்தை இறந்ததுமே அஜித் தரப்பில் இருந்து இது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருக்கும் என அறிக்கை விடப்பட்டதால் காவல்துறையினர் மிகவும் தீவிரமான கண்காணிப்பில் இருந்தனர்.

இந்த நிலையில் மின் மயானத்தில் தந்தையின் உடலை தகனம் செய்த அஜித் அங்கிருந்து புறப்பட்டார். அப்போது திடீரென நின்ற அவர் அங்கிருந்த காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். அஜித்தின் தாயார் இறுதி வரை நின்று சென்றது கணகலங்க வைக்கும் விதமாக இருந்தது. 

முன்னதாக, அஜித் தந்தை இறப்பையொட்டி அவரின் இறுதிச்சடங்கை நடத்த ஒத்துழைக்குமாறு வெளியான அறிக்கையில், ”எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக. உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். 

இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். 

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும்,அர்ப்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். 

எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம்” என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்