Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!-poet vairamuthu entry on satya movies baasha songs on x site - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!

Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Sep 21, 2024 08:28 AM IST

ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார்

Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!
Vairamuthu : ‘50 ஆயிரம் கேட்டேன்.. 500 என்றார்கள்.. பூங்காவில் இருந்தேன்.. தேடி வந்தார்கள்’ வைரமுத்து சொன்ன ஷாக் தகவல்!

X தளத்தில் பதிவிட்டுள்ள வைரமுத்து

‘‘பாட்ஷா படத்திற்குப் பாட்டெழுத அழைத்தார்கள் ‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்’ என்றார் தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன். ‘முழுப்படத்துக்கு 50ஆயிரம்’ என்றேன். அதிர்ச்சியானவர், நாற்காலியைவிட்டு அரை அடி பின்வாங்கினார். ‘பாடலாசிரியருக்கு இவ்வளவு பணமா? நாங்களெல்லாம் ஒருபாட்டுக்கு 500 முதல் 1000 வரை தருவதுதான் வழக்கம்’ என்றார் ‘இப்போது நான்வாங்கும் ஊதியத்தைச் சொல்லிவிட்டேன்; அப்புறம் உங்கள் முடிவு’ என்றேன் ‘பாடல் எழுதுங்கள்; பார்க்கலாம்’ என்றார் எல்லாப் பாடலும் எழுதி முடித்தவுடன் நான் கேட்டதில் 5ஆயிரம் குறைத்துக்கொண்டு 45ஆயிரம் கொடுத்தார்.

நான் பேசாமல் பெற்றுக்கொண்டேன். வெளியானது ‘பாட்ஷா’; வெற்றியும் பெற்றது. படத்தின் வெற்றியில் பாட்டுக்கும் பங்குண்டு என்று பேசப்பட்டது. ஒருநாள் நாகேஸ்வர ராவ் பூங்காவில் பாட்டெழுதிக்கொண்டிருந்தேன் அந்தப்பக்கம் சென்ற கார் ஒன்று என்னைக் கண்டு நின்றது காரிலிருந்து இறங்கி வந்தவர் ‘வீட்டுக்குப் போகும்போது ஆர்.எம்.வீ ஐயா உங்களை அலுவலகம் வந்துபோகச் சொன்னார்’ என்றார்.

சென்றேன், ஆர்.எம்.வீ என் கையில் ஓர் உறை தந்தார். ‘என்ன இது?’ என்றேன் ‘நாங்கள் குறைத்த பணம் 5000’ என்றார். ‘நன்றி’ என்று பெற்றுக்கொண்டேன் தயாரிப்பாளர் குறைத்தாலும் தமிழ் விடாது என்று கருதிக்கொண்டேன். அந்தப் பணம் 5ஆயிரத்தை டிரஸ்ட்புரம் ஆட்டோ ரிக்‌ஷா நிறுத்தத்திற்கு அன்பளிப்பாக வழங்கினேன்,’’

பாட்ஷா தந்த மாற்றம்

என்று அந்த பதிவில் வைரமுத்து எழுதியுள்ளார். பாட்ஷா படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் டூப்பர் ஹிட். படத்தின் இசையமைப்பாளர் தேவா, படத்திற்கு தேவையான பாடல் மற்றும் பின்னணியை வழங்கியிருப்பார். ரஜினியின் மைல்கல்லில் பாட்ஷாவின் வெற்றி முதல் இடத்தில் இருக்கும். உலகளாவிய அளவில் ரஜினியை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதும் பாட்ஷா திரைப்படம் தான்.

பாட்ஷா படத்தின் வெற்றி, இன்றும் வாரத்திற்கு ஒரு டிவியில் பாட்ஷா திரைப்படத்தை நம்மால் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களிலும் பாட்ஷா திரைப்படம் தொலைக்காட்சியை ஆக்கிரமித்துவிடுகிறது. அதில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி, நக்மா, ஜனகராஜ், விஜயகுமார், ரகுவரன் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களும் இன்றும் பேசப்படுகிறது.

கவிஞர் வைரமுத்து தொடர்பாக, கடந்த சில நாட்களாக பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்கு நேற்று ஒரு பதில் பதிவு வெளியிட்ட அவர், அதன் பின், வழக்கமான தன்னுடைய பதிவுகளுக்கு திரும்பியிருக்கிறார். அதனுடைய தொடர்ச்சியாக தான் பாட்ஷா திரைப்படம் தொடர்பான அவருடைய அப்டேட் பார்க்க வேண்டியுள்ளது. 

சினிமா தொடர்பான சுவாரஸ்யமான செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் உடன் தொடர்ந்து இணைந்திருங்கள். சமூக வலைதள பக்கங்கள் மூலமும் எங்களை பின்தொடரலாம். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.