R.M. Veerappan : ஷாக்.. திராவிட இயக்க மூத்த தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மருத்துவமனையில் அனுமதி.. நலம் விசாரித்த முதல்வர்!
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திராவிட இயக்க மூத்த தலைவரும், எம்.ஜி.ஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல்நலக் குறைவால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆருக்கு மிக நெருக்கமானவர் ஆர்.எம்.வீரப்பன். அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் கேட்டறிந்தார்.
முன்னதாக கடந்த 9 ஆம் தேதி ஆர்.எம்.வீரப்பன் தனது 98வது பிறந்தநாளை கொண்டாடினார். ஆர்.எம்.வீ பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.