Singer suchitra: ‘மே மாசம் 98-ல் பாட்டுக்கு பரிசு; படுக்கைக்கு அடி போட்ட வைரமுத்து; இடி கொடுத்த பாட்டி! - சுசித்ரா!
Singer suchitra: ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பற்றி பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் ராதிகா, குட்டி பத்மினி, ஷகிலா உள்ளிட்ட யாருமே அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக நிற்கவில்லை. உண்மையில் வைரமுத்து அதை செய்திருப்பார் என்பதே என் அனுமானம். - சுசித்ரா!
பாடகி சுசித்ரா வைரமுத்து தனக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்து, ஆகாயம் தமிழ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
சின்மயிக்கு யார் ஆதரவு?
இது குறித்து அவர் பேசும் போது, “சின்மயி வைரமுத்துவிடம் இருந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்ட போது அவருக்கு 18 வயது. ஆனால், அந்த சமயத்தில் அந்த விஷயத்தை அவரது அம்மா அப்படியே மூடி மறைத்து விட்டார். அவர் அப்பொழுதே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த சின்மயி, தனக்கு நடந்த கொடுமையை வெளியே சொன்னார். அப்போது சின்மயிக்கு சப்போர்ட்டாக யாருமே வரவில்லை.
ஹேமா கமிட்டி அறிக்கை வந்த பின்னர், பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பற்றி பேட்டி கொடுத்து கொண்டிருக்கும் ராதிகா, குட்டி பத்மினி, ஷகிலா உள்ளிட்ட யாருமே அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக நிற்கவில்லை. உண்மையில் வைரமுத்து அதை செய்திருப்பார் என்பதே என் அனுமானம்.
வைரமுத்து எனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
வைரமுத்து உடன் எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நான் இங்கு பகிர்கிறேன். நான் பாடிய ‘மே மாசம் 98’ -ல் பாடல் வெளியான பிறகு, எனக்கு போன் செய்த வைரமுத்து, உங்கள் வாய்ஸை கேட்டு நான் பைத்தியமாகி விட்டேன். உங்கள் வாய்ஸ் மீது ஒரு காதல் ஏற்படுகிறது. உங்கள் வாய்ஸில் ஒரு காமம் தெரிகிறது என்று கூறினார். அது ஒரு கேவலமான பாட்டு என்பது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் டிவி பார்த்தால் அதில் நடித்திருந்த ரீமாசன் மீது வேண்டுமென்றால் உங்களுக்கு அப்படியான ஒரு எண்ணம் வரலாம். உண்மையில், அந்த பாடலை நான் மிகவும் பதற்றத்தில் தான் பாடினேன். அப்படிப்பட்ட ஒரு பாட்டுக்கு இவர் இப்படியான ஒரு கமெண்டை கொடுக்கும்பொழுது, அங்கேயே ஏதோ தவறாக இருக்கிறது என்பது எனக்கு நன்றாக தெரிந்திருந்தது.
அவர் என்னிடம் போனில் பேசிக் கொண்டே இருக்கும் பொழுதே, நீ வீட்டிற்கு வா உனக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று கூறினார் என்னுடைய பாட்டியை என்னுடன் அழைத்துச் சென்றிருந்தேன். அங்கு என்னை பார்த்த அவர், நீங்கள் தனியாக வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் என்றார். என்னுடைய பாட்டி தான் அவரிடம் அதிகமாக பேசிக் கொண்டிருந்தார். நீங்கள் தான் இந்த குழந்தையை வளர்க்க வேண்டும், நீங்கள் தான் பொறுப்பாக இருக்க வேண்டும், நீங்கள் சுசிக்கு ஒரு தந்தை போல என்று பாட்டிப்பேசவைரமுத்துவிற்கு வேர்த்து கொட்டி விட்டது. உண்மையில் அவர் என்னை தொடுவதற்காக தான் அழைத்து இருந்தார். இறுதியாக என்னுடைய பாட்டி பரிசு ஏதோ கொடுக்கிறீர்கள் என்று சொன்னார்களே என்று சொல்ல, பதட்டத்தில் பின்னாடி சென்ற அவர், ஷாம்பு பாட்டில்களை எடுத்து பரிசாக கொடுத்தார்” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்