தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vannarapettayila: ‘வண்ணாரப்பேட்டையில’ – சிவா, அதிதி வாய்ஸ்ல ஒரு பெப்பி நம்பர்! - எப்படி இருக்கு பாட்டு - வீடியோ!

Vannarapettayila: ‘வண்ணாரப்பேட்டையில’ – சிவா, அதிதி வாய்ஸ்ல ஒரு பெப்பி நம்பர்! - எப்படி இருக்கு பாட்டு - வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
Jun 14, 2023 12:02 PM IST

மாவீரன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது

Peppy romantic track Vannarapettayila from Sivakarthikeyan Aditi Shankar Maaveeran has dropped
Peppy romantic track Vannarapettayila from Sivakarthikeyan Aditi Shankar Maaveeran has dropped

ட்ரெண்டிங் செய்திகள்

 

.'டாக்டர்', ‘டான்’வெற்றிப் படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ்’ திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவர் அடுத்ததாக ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார். அந்த வகையில் உருவாகி வரும் திரைப்படம்தான் மாவீரன்.

இதை 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி இருக்கிறார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் சரிதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்தப்படத்தில் வில்லனாக பிரபல இயக்குநர் மிஷ்கின் நடித்திருக்கிறார்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்து இருக்கிறார். 'மாவீரன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர்.

வருகிற ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப்படத்தை விநியோகம் செய்யும் உரிமையை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. முன்னதாக இந்தப்படத்தில் இருந்து ‘சீனா சீனா’ பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

கபிலன் மற்றும் சி.எம் லோகேஷ் ஆகிய இருவரும் எழுதியிருந்த அந்தப்பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்தார். இந்த நிலையில் இந்தப்படத்தின் இரண்டாவது சிங்கிளான ‘வண்ணாரப்பேட்டையில ’பாடல் வெளியிடப்பட்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்து இந்தப்பாடலை பாடியிருக்கிறார்கள். இந்தப்பாடலை பிரபல பாடலாசிரியர் யுகபாரதி எழுதியிருக்கிறார்.

IPL_Entry_Point