தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Pearanbu: வானதிக்கு ஸ்வேதா போட்ட கண்டிஷன்.. ராஜேஸ்வரி கொடுத்த அதிர்ச்சி!

Pearanbu: வானதிக்கு ஸ்வேதா போட்ட கண்டிஷன்.. ராஜேஸ்வரி கொடுத்த அதிர்ச்சி!

Pandeeswari Gurusamy HT Tamil
Jun 20, 2023 04:06 PM IST

வானதியிடம் ராஜா தொடர்ந்து வேலை கேட்க, ஸ்வேதா அதை விரும்ப மாட்டாள் எனச் சொல்லி வானதி நிரகாரிக்கிறாள். ஆனால் கார்த்தி ராஜாவை வேலைக்கு சேர்த்துக்கொள்ள வானதி அதை ஏற்கிறாள்.

பேரன்பு
பேரன்பு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த சீரியலில் கடந்த வாரம் ஆர்த்தி கர்ப்பமாக அமுதா வானதியை அவமானப்படுத்திய நிலையில் ராஜராஜேஸ்வரி கார்த்தி மற்றும் வானதிக்கு முதல் இரவு ஏற்பாடுகளை செய்திருந்தாள்.

இதைத் தொடர்ந்து இந்த வாரம் இந்த சீரியலில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

வானதியிடம் ராஜா தொடர்ந்து வேலை கேட்க, ஸ்வேதா அதை விரும்ப மாட்டாள் எனச் சொல்லி வானதி நிரகாரிக்கிறாள். ஆனால் கார்த்தி ராஜாவை வேலைக்கு சேர்த்துக்கொள்ள வானதி அதை ஏற்கிறாள்.

ஆனால் திட்டமிட்டு ராஜாவை வேலைக்கு சேர்த்து கொண்டதாக ஸ்வேதா வானதியிடம் சண்டை பிடிக்க ராஜேஸ்வரி அவளை சமாதானப்படுத்துகிறாள்.

ஸ்வேதா ராஜா திருமண நாளை கொண்டாட வானதி முடிவெடுக்க ராஜேஸ்வரி சம்மதிக்கிறாள். அமுதா ஸ்வேதாவை ஏற்றி விட, அவள் தனது பங்ஷனின் போது வீட்டில் இருக்கக் கூடாது என சொல்ல, வானதி அதற்கு சம்மதிக்கிறாள்.

பங்ஷனில் ராஜேஸ்வரி வானதியை காணாமல் ஃபோன் செய்ய வானதி ஆபிஸில் இருப்பதாகவும் வந்து விடுவதாவும் சொல்லி சமாளிக்க வானதி வீட்டிற்கு வராததால், ராஜேஸ்வரி சந்தேகப்பட்டு ஆபிஸ்ற்கு சென்று வானதியை வீட்டிற்கு அழைத்து வருகிறாள். வானதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்ல, ஸ்வேதா மறுக்க முடியாமல் காலில் விழுகிறாள்.

பிறகு வானதி கணக்கு கேட்க, பசுபதி கணக்கு தராமல் மில்லை தீ வைத்து எரிக்க மில்லில் சிக்கிக் கொண்டவர்களை வானதி மீட்டெடுக்க அவளுக்கு அடிபடுகிறது. இப்படி அமைந்த நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே பேரன்பு சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியை காண தவறாதீர்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்