நடிகை நயன்தாரா பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில் த்ரிஷா குறித்து பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே காணலாம்.

By Kalyani Pandiyan S
Nov 18, 2024

Hindustan Times
Tamil

த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோரை நான் நண்பர்கள் என்று சொல்லமாட்டேன். காரணம், நட்பு என்பது மிகப்பெரிய வார்த்தை.

அதை அவர்களுக்கு பயன்படுத்த முடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதுதான் அந்த பிரச்சினை என்று என்னால் அப்படியே பொதுவெளியில் அப்படியே போட்டு உடைக்க முடியாது.

ஹீரோயின்கள் என்றாலே அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக கூட சொல்வார்களே.. ஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் ஆகாது என்று.. அது போலதான். 

அப்படியும் அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர்களுக்கு என்னிடத்தில் பிரச்சினை இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதனை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அதே போல பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நானாக சென்றெல்லாம் அவர்களிடத்தில் பேசமாட்டேன்.

அது எனக்குத் தேவையே கிடையாது. உண்மையில், நண்பர் என்ற ஸ்தானத்தில் ஒருவர் இருந்தால் அவரிடத்தில் நிச்சயம் நான் சென்று பேசுவேன். 

அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுப்பேன்.ஆனால், இவர்களிடத்தில் அந்தளவு பெரிய பிரச்சினை கிடையாது. த்ரிஷாவிற்கு என்னை பிடிக்காது. 

அவருக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காதுதான்” என்று பேசினார்.

மலச்சிக்கல்