உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்

உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்

Marimuthu M HT Tamil Published Nov 24, 2024 04:06 PM IST
Marimuthu M HT Tamil
Published Nov 24, 2024 04:06 PM IST

உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள் குறித்து பார்ப்போம்.

உறவு தான்..  ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்
உறவு தான்.. ராஷ்மிகாவுடன் ஃபுட் டேட் செய்யும் விஜய் தேவரகொண்டா.. உறுதியான காதல்.. டீகோடிங் செய்யும் நெட்டிசன்கள்

நேஷனல் க்ரஷ் என செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும், தென்னிந்திய நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் டேட்டிங் செய்வதை வெளிப்படுத்தாதபோது பல முறை கேமராவில் சிக்கியிருக்கின்றனர்.

குறிப்பாக இருவரும் தனித்தனியாக படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியே விடும்போது, இரண்டும் ஒரே இடம் தான் என அதைப் பார்த்த பலர் கமெண்ட் இட்டு வருகின்றனர்.

சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஒரு நிகழ்ச்சியில் தான் சிங்கிளாக 35 வயது வரை எப்படி இருக்க முடியும் எனப்பதில் சொல்லி தான் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை சூசகமாக தெரிவித்தார்.

விஜய் தேவரகொண்டா இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்த சில நாட்களுக்குள், அவர் ராஷ்மிகா மந்தனாவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படங்கள் வெளிவந்து வைரல் ஆகியுள்ளன.

அதில் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஒரு உணவகத்தில் ஒன்றாக மதிய உணவு உணவருந்தியுள்ளனர். விஜய் மற்றும் ராஷ்மிகாவின் மதிய உணவு டேட்டிங் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

வைரல் ஆன இரண்டு புகைப்படங்கள்:

ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டாவின் சமீபத்திய இரண்டு புகைப்படங்களில், விஜய் தேவரகொண்டா ஒரு மேஜையில் மதிய உணவு சாப்பிடுவதைக் காணலாம். அவருக்கு முன் ராஷ்மிகா மந்தனா அமர்ந்துள்ளார். அதில் ராஷ்மிகா மந்தனா மட்டும் தான் உணவருந்துவதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். படத்தில் 'நல்ல உணவு' என்று கேப்சன்கூட இட்டிருக்கிறார்.

ஆனால், விஜய் தேவரகொண்டா அவர் முன்பு தான் அமர்ந்து உணவு அருந்துகிறார்.

இதை தூரத்தில் இருந்து ஒருவர் படம் எடுத்து இணையத்தில் வெளியிட, இரண்டு புகைப்படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமைகளை வைத்து, அதனை இணைத்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர், நெட்டிசன்கள்.

நெட்டிசன்கள் சொல்லும் காரணங்கள்:

ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதற்கான காரணங்கள் என சிலவற்றை நெட்டிசன்கள் பட்டியலிடுகின்றனர். அதில் ராஷ்மிகா ஸ்லீவ்லெஸ் கிராப் செய்யப்பட்ட நீல நிற டாப் அணிந்து இருந்தார். விஜய் தேவரகொண்டா நீல நிற ஜாக்கெட் அணிந்திருந்தார். இவர்கள் காதலிப்பதால் தான் ஒரே நிறத்திலான ஆடைகளை அணிந்து இருப்பதாக, நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மங்கலான விஜய் தேவரகொண்டா உணவருந்தும் புகைப்படத்தில், முன்னாள் இருக்கும் இளம்பெண் நீலநிறத்தில் இருப்பதும், ராஷ்மிகா பகிர்ந்த படமும் இரண்டும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டவைதான் என்பதை எளிதில் காட்டமுடியும். இதன்மூலம் இருவரும் மிகவும் வெளிப்படையான டேட்டிங்கில் இருப்பது தெரியவருகிறது என்கின்றனர்.

இதுதொடர்பாக சில நெட்டிசன்கள் அடித்த காமெடியான பஞ்ச்கள்:

’விஜய்யும் ராஷ்மிகாவும் இருவரும் காதலிக்கிறார்கள் என்று நமக்குத் தெரியும். இது அவர்களுக்கும் தெரியும் என்று நமக்குத்தெரியும். ஆனாலும் கண்ணாமூச்சி விளையாட ஆசைப்படுகிறார்கள்' என ஒரு நெட்டிசன் கருத்திட்டுள்ளார். அதேபோல் இன்னொருவர், ‘’ இந்த கிசுகிசுக்களைப் பற்றி எல்லாம் பேசி, தங்கள் மொமன்ட்களை அவர்கள் அழிக்க விரும்பவில்லை. ஒருவேளை நமக்குத்தெரிந்தாலும் அவர்களுக்கு கவலை கிடையாது. கியூட் ஜோடி’ நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.