காதல்.. லிவின் ரிலேஷன்ஷிப்.. மனம் திறந்த நடிகை! ஓவர் கான்ஃபிடன்டால் நடந்த விபரீதம்..
நடிகை சுனைனா அவரின் முதல் காதல் குறித்து மனம் திறந்து தற்போது பேசியுள்ளார். தற்போது ராக்கெட் டிரைவர் படத்தில் நடித்துள்ள அவர் அளித்த பேட்டி ஒன்றில் முதல் காதல் பற்றி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் எனும் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தார் சுனைனா. இவர் இந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதையடுத்து, மீண்டும் நகுலுக்கு ஜோடியாக மாசிலாமணி படத்தில் நடித்திருப்பார்.
கதையை தேர்வு செய்து நடிக்கும் சுனைனா
இந்த படத்தையடுத்து அவர் தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார் சுனைனா. இவருக்கென சில ரசிகர்களையும் வைத்திருக்கிறார்.
இந்நிலையில், அவர் ஏபிஜே அப்துல் கலாம் குறித்த டைம் டிராவல் படம் ஒன்றில் தற்போது நடித்துள்ளார். அந்தப் படம் குறித்து பிஹைண்ட் உட்ஸ் யூடியூப் சேனலுக்கு நேர்காணல் ஒன்றை அளித்து சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளார்.
ராக்கெட் டிரைவர்
ராக்கெட் டிரைவர் திரைப்படத்தில் நான் சிறிய கதாப்பாத்திரத்தில் தான் நடித்துள்ளேன். ஆனால், இது எனக்கு ஃபீல் குட் படமாக அமைந்துள்ளது. காதல், குடும்பம், ஆக்ஷன் போன்ற திரைப்படங்கள் அனைத்தையும் பார்த்த பிறகு இந்தப் படத்தில் நடிப்பது மனதுக்கு மிக நெருக்கமாக இருந்தது.
சிறுவயதாக இருந்தபோது, வீட்டிற்கு வரும் உறவினர் முன் நடித்து காட்டிய போது தான் எனக்குள் இருந்த திறமையை கண்டுபிடித்தேன். வாழ்க்கையின் மிக கடினமான சூழலிலும் இது எனக்கு உதவியது எனக் கூறியிருந்தார்.
சினிமா தான் முதல் காதல்
பின், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய சுனைனா, சினிமா தான் என் முதல் காதல். வீட்டில் நான் இருக்கும்போது கூட , சினிமாவை பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல் அதை என் தொழிலோடு தொடர்புபடுத்தி தான் பார்ப்பேன்.
காதல், திருமணம், லிவிங் டூ கெதர் என்பது அவரவர் தேவைக்கு ஏற்ப மாறுபடும். தனக்கு இப்போது திருமணம் குறித்த எந்த ஆசையும் இல்லை எனக் கூறியிருந்தார். வாழக்கையில் பல இக்கட்டான சூழலைக் கடந்து வந்துள்ளேன். பல துரோகங்களையும் சந்தித்துள்ளேன். தான் எடுக்கும் முடிவு தான் மிகவும் சரியானது எனக் கூறி அதனால் பல எதிர்வினைகளையும் சந்தித்துள்ளேன் எனவும் கூறிய அவர், ராக்கெட் டிரைவர் திரைப்படம் குடும்பத்துடன் பார்க்க மிகவும் உகந்த படமாக இருக்கும் என கூறியுள்ளார்.
திரைக்கு வரும் அப்துல் கலாம்
மறைந்த இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ரோல் மாடலாக நினைக்கும் ஒரு ஆட்டோ டிரைவர், டைம் டிராவல் செய்து வந்த இளம் வயது அப்துல் கலாமை நேரில் கண்டால் என்ன நடக்கும் என்பதே ராக்கெட் டிரைவர் படத்தின் கதை. இந்தப் படத்தில் டிராபிக் போலீசாக நடித்துள்ளார் சுனைனா. சயின்ஸ் பிக்ஷன் ஃபேன்டஸி திரைப்படமான ராக்கெட் டிரைவர், சிறந்த பொழுதுபோக்கு படமாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.
கிசுகிசு
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வம்சம், நீர்பறவை, தெறி, சில்லுக் கருப்பட்டி, ட்ரிப், ரெஜினா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் இன்ஸ்பெக்டர் ரிஷி எனும் வெப் தொடரிலும் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் நடிகை சுனைனாவிற்கும், துபாயைச் சேர்ந்த பிரபல யூடியூபர் காலித் அல் அமெரி என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது என கிசுகிசுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்