அந்த 3 குரங்குங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்.. என்ன வச்சு பணம் சம்பாதிங்குறாங்க.. பிரபலங்களை தாக்கிய நயன்தாரா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அந்த 3 குரங்குங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்.. என்ன வச்சு பணம் சம்பாதிங்குறாங்க.. பிரபலங்களை தாக்கிய நயன்தாரா

அந்த 3 குரங்குங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்.. என்ன வச்சு பணம் சம்பாதிங்குறாங்க.. பிரபலங்களை தாக்கிய நயன்தாரா

Malavica Natarajan HT Tamil
Dec 12, 2024 09:57 AM IST

தன்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக பேசும் யூடியூபர்களை குரங்குகள் என நயன்தாரா விமர்சித்தது தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

அந்த 3 குரங்குங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்.. என்ன வச்சு பணம் சம்பாதிங்குறாங்க.. பிரபலங்களை தாக்கிய நயன்தாரா
அந்த 3 குரங்குங்களுக்கு இது மட்டும் தான் தெரியும்.. என்ன வச்சு பணம் சம்பாதிங்குறாங்க.. பிரபலங்களை தாக்கிய நயன்தாரா

இது தனுஷ் மற்றும் நயன்தாரா என்ற இருவரின் தனிப்பட்ட பிரச்சனையாக மட்டும் இல்லாமல் பொதுமக்கள் உள்பட பலரும் கருத்து தெரிவித்து பெரும் பூதாகரமாக மாறியது.

தனுஷ் உடனான பிரச்சனை

இந்த பிரச்சனை நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், நயன்தாரா இந்த விவகாரம் குறித்து ஹிந்தி யூடியூப் சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனுஷ் உடனான விவகாரம் குறித்தும், தன்னை விமர்சனம் செய்யும் யூடியூபர்கள் குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.

அந்தப் பேட்டியில், நான் என் திருமணத்தை பணமாக்க நினைத்ததாக பலரும் கூறுகின்றனர். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. எங்கள் காதல் மலர்ந்த தருணத்தையும் வாழ்க்கையின் உன்னத தருணங்களையும் நினைவு கூறவே இந்த ஆவணப்படத்தை எடுக்க நினைத்தேன். அதையும் சிலர் விமர்சித்தனர்.

நான் பயப்பட மாட்டேன்

நான் தனுஷிடம் பேச எவ்வளவோ முயற்சித்தேன். ஆனால் எதுவும் சரியாக அமையவில்லை. நான் ஒரு விஷயத்தை சரியாக செய்யும் போது யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.

எங்களின் விளம்பரத்திற்காக தனிப்பட்ட மனிதரின் பெயரை கெடுக்கும் அளவிற்கு நாங்கள் செல்லவில்லை. அப்படி செய்திருந்தால் மக்கள் ஆதரவு இருந்திருக்காது எனத் தெரிவித்தார்.

3 வகை குரங்குகள்

மேலும் பேசிய நயன்தாரா, தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் யூடியூப் பக்கங்கள் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். ஒரு 3 பேர் குழு இருக்கிறது. அவர்கள் மிகவும் வேடிக்கையானவர்கள். அவர்களின் 50 வீடியோக்களில் 45 என்னைப் பற்றியதாக்த்தான் இருக்கும். நான் அவர்களை 3 வகையான குரங்குகளாகத் தான் பார்க்கிறேன். அப்படி சொல்வதற்கு என்னை மன்னிக்கவும். அந்த குரங்குகளில் ஒன்று கெட்டதை மட்டும் தான் பார்க்கும், ஒன்று கெட்டதை மட்டும் தான் கேட்கும், ஒன்று கெட்டதை மட்டும் தான் சொல்லும்.

என்னை வைத்து சம்பாதிக்கிறார்கள்

இவர்கள் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் ஏன் என்னைப் பற்றி எப்பொழுதும் அவதூறு பரப்புகின்றனர் என்ற கேள்வி எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். பின்னர் எனக்கு தெரிந்தவர்களிடம் இவர்களைப் பற்றி விசாரிக்கையில், இப்படி என்னைப் பற்றி பேசுவதால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைப்பதாக சொன்னார். அவர்கள் என் பெயரை வைத்து சம்பாதித்தால் அதில் எனக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. அவர் என்னை பற்றி மட்டும் இல்லை யாரைப் பற்றியும் பேசி சம்பாதிப்பார்கள்.

வேடிக்கையாக இருக்கிறது

அவர்கள் வீடியோவைப் பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு தான் வரும். அவர்கள் எல்லாம் என் அப்பா போலவும், என் வாழ்க்கையில் நடந்த எல்லா விஷயங்களையும் என் பக்கத்தில் நாற்காலி போட்டு அமர்ந்து பார்த்தது போலவும் பேசுவார்கள், இதை எல்லாம் பார்க்கும் போது எனக்கு வேடிக்கையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.