நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு.. ஜவ்வாக இழுக்கும் பஞ்சாயத்து
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு.. ஜவ்வாக இழுக்கும் பஞ்சாயத்து

நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு.. ஜவ்வாக இழுக்கும் பஞ்சாயத்து

Malavica Natarajan HT Tamil
Nov 29, 2024 12:38 PM IST

நானும் ரவுடி தான் படப்பிடிப்பு காட்சிகளை தங்களது ஆவணப்படத்தில் பயன்படுத்தியது விதி மீறல் அல்ல என நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு..
நாங்க எந்த தப்பும் பண்ணல.. விடாப்பிடியாக பதிலளித்த நயன்தாரா தரப்பு..

இதுகுறித்து பேசிய அவர், நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. அதனால் இதை விதி மீறல் எனக் கூற முடியாது என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

தனுஷிற்கு ஆதரவாக தீர்ப்பு

'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பு காட்சிகளை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியது தொடர்பாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்டோருக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர வொண்டர் பார் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனுஷ் வக்கீல் நோட்டீஸ்

நடிகை நயன்தாரா தனது திருமண ஆவண படத்துக்கு நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தயாரித்த நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நடிகை நயன்தாராவுக்கு தனுஷ் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

நயன்தாரா அறிக்கை

இந்த நோட்டீசுக்கு பதிலளித்து நடிகை நயன்தாரா வெளியிட்ட அறிக்கை, தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரையுலகங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக நடிகர் தனுஷின் வொண்டர் பார் நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனு தாக்கல்

அந்த மனுவில், மும்பையை சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மேலும், வொண்டர்பார் நிறுவனத்திற்கு சொந்தமான வீடியோ காட்சிகள் ஆவணப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நயன்தாராவின் நடிப்பும், அதில் பயன்படுத்தப்பட்ட குரலும் எங்கள் நிறுவனத்திற்கு சொந்தமானது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், நெட் பிளிக்ஸ் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னையில் வசிப்பதாக தெரிவித்தனர்.

உரிமையியல் வழக்கு தொடரலாம்

மேலும், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் எனவும் உத்தரவிட்டார்.

நயன்தாரா தரப்பு விளக்கம்

நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில் எந்த விதி மீறலும் இல்லை என நயன்தாரா விக்னேஷ் சிவன் தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளை பயன்படுத்தவில்லை. அதனால், நாங்கள் எந்த விதி மீறலிலும் ஈடுபடவில்லை. இங்கு காப்பி ரைட்ஸ் பிரச்சனையே இல்லை. 

இந்த ஆவணப்படத்தில் தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட காட்சிகள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இதை விதி மீறல் எனக் கூற முடியாது என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு நீதிமன்றம் விசாரணையை தள்ளி வைத்தது. இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும், வரும் டிசம்பர் 2ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கை

முன்னதாக நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்.

காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

2 வருட காத்திருப்பு

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் நயன்தாரா: பியாண்ட் தி ஃபேரி டேல் ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம் எனத் தெரிவித்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.