நயன்தாரா மீது வழக்கு.. அனுமதி பெற்ற தனுஷ்.. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் சிக்கலில் லேடி சூப்பர் ஸ்டார்!
- நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தொடர உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார் நடிகர் தனுஷ்.
- நானும் ரவுடி தான் திரைப்பட காட்சிகளை பயன்படுத்திய விவகாரத்தில், நயன்தாரா மீது உரிமையியல் வழக்கு தொடர உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார் நடிகர் தனுஷ்.
(1 / 6)
நடிகை நயன்தாராவுக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி கேட்டு நடிகர் தனுஷ் தாக்கல் செய்த மனுவிற்கு அனுமதி கிடைத்துள்ளது.
(2 / 6)
நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் திருமண வீடியோ ஆவணப்படத்தை, சமீபத்தில் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளம் வெளியிட்டது. அதற்கு முன், தனுஷ் பற்றி நயன்தாரா பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வெளியிட்டார்
(3 / 6)
தனது திருமண ஆவணப்படத்தில், நானும் ரவுடி தான் படத்தில் காட்சிகளை பயன்படுத்த தான் தனுஷ் உதவியை நாடியதாகவும், அவர் அதற்கு அனுமதி தராமல் இழுத்தடித்ததாகவும், பின்பு, பாடல் வரிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறியிருந்தார் நயன்தாரா.
(4 / 6)
மேலும், நடிகர் தனுஷ் பற்றி கடுமையான விமர்சனங்களையும் அந்த அறிக்கையில் வெளியிட்டார் நயன்தாரா. யாரும் எதிர்பாராத இந்த மோதல் சம்பவத்தால், கோலிவுட் கொஞ்சம் பரபரப்பானது.
(5 / 6)
அனைத்திற்கும் அமைதியாக இருந்த தனுஷ் தரப்பு, தற்போது சட்டரீதியாக நயன்தாராவுக்கு தங்கள் பதிலடியை தர முன்வந்துள்ளது. நயன்தாராவுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் தனுஷ் மனுத்தாக்கல் செய்தார்.
(6 / 6)
மனுவை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், நயன்தாரா மீது வழக்கு தொடர, நடிகர் தனுஷிற்கு அனுமதியளித்துள்ளது. அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார், நடிகர் தனுஷின் வுண்டர் பார் தயாரிப்பு நிறுவனம் சார்பில், இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. (Lakshmi)
மற்ற கேலரிக்கள்