காதல் கொடுத்த வலி.. கிளாமரில் உச்சம்.. " நயன்தாரா கம்பேக் வெறியில இருந்தாங்க" -விஷ்ணு வர்தன்
நயன்தாரா பில்லா திரைப்படத்தில் கமிட்டான கதையை அந்தப்படத் தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேசியிருக்கிறார்
(1 / 8)
நயன்தாரா பில்லா திரைப்படத்தில் கமிட்டான கதையை அந்தப்படத் தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேசியிருக்கிறார்இது குறித்து அவர் பேசும் போது, "நயன்தாரா அந்த சமயத்தில் சில பிரச்சினைகள் காரணமாக நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.
(2 / 8)
இந்த நிலையில் நாங்கள் பில்லா திரைப்படத்தில் நயன்தாரா நடித்த கதாபாத்திரத்திற்கு, வேறு சில நடிகைகளை பார்த்துக் கொண்டிருந்தோம். அவர் மீண்டும் நடிக்க வருகிறார் என்று கேள்விப்பட்டதும், உடனடியாக அவரை சென்று நாங்கள் புக் செய்தோம்.
(3 / 8)
அந்த படத்தில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக நடித்திருப்பார். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அந்தப்படத்தில் மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற வெறியில் நடித்தார்.விட்டுக்கொடுக்க மாட்டார்அவரது சினிமா கெரியரை நீங்கள் எடுத்து பார்த்தீர்கள் என்றால், பல பிரச்சினைகளால் துவண்டு கெரியரை விட்டு விலகி, மீண்டும் பலமுறை கம்பேக் கொடுத்திருக்கிறார்.
(4 / 8)
அவருக்கும் எனக்கும் இடையே உள்ள ஒரு ஒற்றுமை நாங்கள் இருவருமே பின்வாங்க மாட்டோம். எங்களுக்கு பிடித்த விஷயத்தை கடைசி வரை விட்டுக் கொடுக்க மாட்டோம். எங்களுக்கு எது வேண்டுமோ அதற்காக போராடுவோம். அவர் அந்த படத்தில் நடித்துபோது எடையை வேறு குறைத்து இருந்தார். .
(5 / 8)
அது அந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் அழகாக மாறி இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக அந்த கதாபாத்திரம் அவ்வளவு அழகாக ஒர்க்அவுட் ஆனதற்கு அந்த கதாபாத்திரத்தின் கேரக்டரும் நயனின் ரியல் லைஃப் கேரக்டரும் ஒன்றாக இருந்ததே காரணம்அதன் காரணமாகவே அந்த கதாபாத்திரம் அவ்வளவு அழகாக ஒர்க் அவுட் ஆனது.
(6 / 8)
அதன் பின்னர் ஆரம்பம் படத்தில் அவரை நான் நடிக்க வைத்திருந்தேன். அந்த படத்திலும் அவர் நடித்த கதாபாத்திரம் அவ்வளவு ஸ்ட்ராங்கான கதாபாத்திரம். அதற்கும் அவர் மிகவும் பொருத்தமாக இருந்தார்.
மற்ற கேலரிக்கள்