தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Naga Chaitanya: ‘மனம்’ ரீ ரிலிஸ்; சமந்தா உடனான படுக்கை காட்சி;முகத்தை திருப்பிய நாக சைதன்யா - வைரல் வீடியோ!

Naga Chaitanya: ‘மனம்’ ரீ ரிலிஸ்; சமந்தா உடனான படுக்கை காட்சி;முகத்தை திருப்பிய நாக சைதன்யா - வைரல் வீடியோ!

Kalyani Pandiyan S HT Tamil
May 24, 2024 04:35 PM IST

Naga Chaitanya: நாகசைதன்யா, சமந்தா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான மனம் திரைப்படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டரில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் அங்கு நடிகர் நாக சைதன்யா சென்று படத்தை பார்த்தார்.

Naga Chaitanya: சமந்தா உடனான படுக்கை காட்சி.. முகத்தை திருப்பிய நாக சைதன்யா.. ‘மனம்’ ரீ ரிலிஸில் சம்பவம் செய்த ரசிகர்கள்
Naga Chaitanya: சமந்தா உடனான படுக்கை காட்சி.. முகத்தை திருப்பிய நாக சைதன்யா.. ‘மனம்’ ரீ ரிலிஸில் சம்பவம் செய்த ரசிகர்கள்

ட்ரெண்டிங் செய்திகள்

மனம் படத்தை பார்த்த நாக சைதன்யா 

ஹைதராபாத்தில் இருக்கும் தேவி 70 எம்.எம் திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட மனம் திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் நாக சைதன்யா கலந்து கொண்டார்.  இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

அந்த வீடியோவில் தியேட்டருக்குள் நுழையும் நாகசைதன்யாவின் மீது ரசிகர்கள் பூக்கள் தூவி வரவேற்கின்றனர். தொடர்ந்து அவர் இயக்குநர் விக்ரம் குமாருடன் அமர்ந்து படத்தை பார்க்கின்றார். இருப்பினும், தொடர்ந்து பின்னால் வந்த ரசிகர்கள், இருக்கையில் அமர்ந்திருந்த நாக சைதன்யாவின் மீது, பூக்களைத் தூவுகின்றனர். படத்தை வெகுவாக ரசித்த ரசிகர்கள் டிக்கெட்டுகளை தூவி ஆரவாரம் செய்தனர். 

குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், சமந்தாவுடனான திருமண காட்சியின் போது ரசிகர்கள் நாக சைதன்யாவின் ரியாக்‌ஷனை படம் பிடித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கின்றனர்.  அந்த வீடியோவில், படத்தில் திருமணம் முடிந்து முதலிரவு காட்சி வந்த போது, நாக சைதன்யா தன்னுடைய முகத்தை திருப்பிக்கொண்டது போல தெரிகிறது. தொடர்ந்து ஆரவாரம் செய்த ரசிகர்களை பார்த்து கோபம் அடைந்த அவர், அவர்களை இருக்கையில் அமருமாறு சொல்லி கண்டிக்கிறார்.

நாக சைதன்யா மற்றும் சமந்தா நடித்த படங்கள்

தெலுங்கில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ரீமேக்கான ‘ஏ மாயா சேசாவே’ படத்தில் நாக சைதன்யாயும், சமந்தாவும் முதன்முறையாக ஒன்றாக நடித்தனர். இறுதியாக அவர்கள் கடந்த 2019ம் ஆண்டு வெளியான மஜிலி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதற்கிடையில் மனம், ஆட்டோநகர் சூர்யா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தனர். சமந்தாவின் ஓ பேபி திரைப்படத்தில் நாக சைதன்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். 

ஒரு கட்டத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள், கருத்து வேறுபாட்டால் விவாகரத்தும் செய்து கொண்டனர். இதனையடுத்து சமந்தா மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வந்தது தெரிய வந்தது. 

மனம் திறந்த சமந்தா 

விவாகரத்து குறித்து சமந்தா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில்,  , "எனக்கு இந்த பிரச்சினை ஏற்படுவதற்கு முந்தைய ஆண்டு நன்றாக நினைவிருக்கிறது. அது எனக்கு மிகவும் கடினமான ஆண்டாக இருந்தது.  நானும் எனது மேலாளர் ஹிமாங்கும் மும்பையிலிருந்து திரும்பி வந்த நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்போது நான் இறுதியாக, நான் அமைதியாக உணர்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். 

மிக மிக நீண்ட காலமாக, நான் நிம்மதியாகவும் அமைதியாகவும் உணரவில்லை. இறுதியாக இப்போது நான் சுவாசிக்க முடியும். நான் தூங்க செல்ல முடியும் போல் உணர்கிறேன், இப்போது நான் எழுந்து என் வேலையில் கவனம் செலுத்த முடியும். நான் வேலையில் இருக்க முடியும். சிறந்து இருக்க முடியும்” என்று சொன்னேன். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

 

 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்