மீடியா ஜிமிக் தெரியாத பையன்.. கபடி பிளேயர்.. இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல.. முத்துக்குமரன் பற்றி ரவீந்தர்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீடியா ஜிமிக் தெரியாத பையன்.. கபடி பிளேயர்.. இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல.. முத்துக்குமரன் பற்றி ரவீந்தர்

மீடியா ஜிமிக் தெரியாத பையன்.. கபடி பிளேயர்.. இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல.. முத்துக்குமரன் பற்றி ரவீந்தர்

Marimuthu M HT Tamil Published Oct 22, 2024 08:51 PM IST
Marimuthu M HT Tamil
Published Oct 22, 2024 08:51 PM IST

மீடியா ஜிமிக் தெரியாத பையன் என்றும், கபடி பிளேயர் எனவும், இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல என்பது குறித்தும் முத்துக்குமரன் பற்றி ரவீந்தர் கூறியுள்ளார்.

மீடியா ஜிமிக் தெரியாத பையன்.. கபடி பிளேயர்.. இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல.. முத்துக்குமரன் பற்றி ரவீந்தர்
மீடியா ஜிமிக் தெரியாத பையன்.. கபடி பிளேயர்.. இவன்கிட்ட தோக்கணும்ன்னு இருக்குமில்ல.. முத்துக்குமரன் பற்றி ரவீந்தர்

இதுதொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ரவீந்தர் டெலிவிகடன் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியின் தொகுப்பு இது..

ஒரு வார எவிக்சன் என்பது மனவருத்தமாக இருந்ததா. உங்கள் திட்டம் என்னமாதிரி இருந்தது?

பதில்: நான் ஒரு பிளானோடு போனேன். இந்த வாரம் தான் நம்ம கடைசி வாரம் என நினைத்து ஆடணும் என்று போனேன். யாருடைய விளையாட்டிலும் துரோகம் செய்யக்கூடாதுன்னு நினைச்சேன். என்னுடைய மைண்ட் செட் என்னவென்றால், என்னைப்போல் முழுக்க முழுக்க உடல் பருமன் கொண்டவர்களுக்கு இது ஒரு சாத்தியமில்லாத விஷயம் கிடையாது. எழுந்து வா. நிச்சயம் நான் ஒன்று செய்யலாம். நமக்குப்போதுமான அளவு ஒரு சக்தியைக் கொடுத்திருக்கார் அப்படிங்கிறதை இந்த விளையாட்டில் காண்பிக்கனும்னு நினைச்சேன். முயற்சி செய்தேன். மூளைக்கு எவ்வளவு வேலை கொடுக்க முடியுமோ அதை செய்தேன். நான் என்ன நினைச்சேனோ அதைத் திருப்தியாகத் தான் செய்துட்டு வந்தேன்.

முத்துக்குமரன் பற்றி சொல்லுங்க. உங்கள் இடத்தை முத்துக்குமரன் ரீப்ளைஸ் செய்துட்டார்னு சொல்றாங்க. அதைப் பற்றி சொல்லுங்க?

பதில்: ஏன் இடத்தை ரீப்ளைஸ் செய்துட்டான்னு சொல்ற விஷயத்தை விட, அவன் என்னை விடத் தகுதியானவன்னு தான் நான் சொல்றேன். என்னையே அவனுக்குக் கீழே தான் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். ஒருத்தருடைய திறமையைப் பார்த்துட்டு என்னால் மறுக்கமுடியல. அடடா இவன்கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு தோணும். அவனே என்கிட்ட சொல்வான். எனக்கு 106 நாள் வேணும்ணே. அந்த கடைசி நாள் நீ இல்லாமல் இருந்தால் பரவாயில்லை. அப்படின்னு சொல்வான். இவன்கிட்ட தோத்துப்போகணும்ன்னு ஒன்று இருக்கும்ல. அந்த மாதிரியான ஆள் தான் முத்துக்குமரன். வெளியில் வரும்போது கூட, விட்றாதடா குமரா அப்படின்னு சொல்லியிருப்பேன். காரணம் என்னவென்றால், அவன்கிட்ட நல்ல புரிதல் இருக்கு. மனவலிமை இருக்கு, உடல் வலிமை இருக்கு. அவன் புரோ கபடிக்கு மூன்று முறை முயற்சி செய்து செலக்ட் ஆகாத மாநில அளவிலான கபடி ப்ளேயர் அவன். அருமையான உடல்வாகு. பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்து மெடிடேசன் 15 நிமிசம். தலைகீழாக ஆசனம் செய்து மைண்ட்டை கன்ட்ரோல் செய்வது, ஷோவுக்காகப் பண்றது எல்லாம் கிடையாது. சின்ஸியராகப் பண்ணுவான். அதன்பின் அவனுடைய நிதானமும் சிந்தனையும். ஆனால், சீக்கிரமாக சில விஷயங்களை செய்து வெறுப்புகளை சம்பாதிக்கக் கூடிய மீடியா ஜிமிக் தெரியாத பையன். ஒவ்வொருத்தரை ஒவ்வொருத்தவங்களுக்குப் பிடிக்கும். ஆனால், முத்துக்குமரனை சில நாட்களில் தமிழ்நாட்டுக்கே பிடிக்கும்.

பிக்பாஸ் சீசன் 8 வீட்டில் முத்துக்குமரனைத் தாண்டி யார் மீது நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்?

பதில்: விஷால் இப்போது கேட்பார்பிள்ளை. வெளியில் வரும்போது அதுதான் சொல்லிட்டு வந்தேன். நம்ம தீபக்கோட பொம்மை கிடையாதுங்கிற அளவு வெளியில் வரணும்.

பிக்பாஸில் சாச்சனாவே நாமினேட் பண்ணுனீங்க. அவங்க உள்ளே வந்த பிறகு குற்ற உணர்வாக உணர்ந்தீங்களா?

பதில் - நான் ஒரு இடத்தில் தான் குற்றவுணர்வு ஆக ஃபீல் செய்தேன். நான் சொன்னது என் காரணம். அதை நான் சொன்னதாக ஃபீல் செய்து நீங்க அந்த பெண் மீது நாமினேஷன் போட்ட மாதிரி இருக்கு. நான் சுத்திவிட்டேன் தான். நானும் வெளியில் போகக்கூடாது எப்படியோ அப்படி தான் விளையாண்டேன்.

நன்றி: டெலி விகடன் யூட்யூப் சேனல்!