ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறிய பிக்பாஸ் வீடு! புது டாஸ்க்கால் ஆக்டிவ்ஆன போட்டியாளர்கள்!
தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இன்று பிக்பாஸில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் இருந்து வருகிறது. மேலும் இதுவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமான டி. ஆர். பி கொண்ட நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த சீசன்களை விட இந்த சீசன் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தொகுப்பாளராக விஜய் சேதுபதி, “ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு” எனப் பல புதிய விதிமுறைகள் என பல புதுமைகள் நிறைந்து காணப்படுகிறது இந்த சீசன் பிக்பாஸ். தொடங்கிய நாளில் இருந்தே அதிக சுவாரசியமாகவும், விறு விறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கி மூன்றாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இன்று பிக்பாஸில் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
புதிய டாஸ்க்
சீசன் தொடங்கிய நாளில் இருந்து பல புதிய டாஸ்க்குகளை பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கி வருகிறார். அந்த நிலையில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்றை வழங்கி உள்ளார். இது குறித்தான மூன்றாவது புரோமோ சற்று முன் வெளியாகியுள்ளது. அதன் படி பிக்பாஸ் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியுள்ளது. அதில் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களும் என இரு அணி உள்ளது. வாடிக்கையாளர்கள் கேட்பதை பணியாளர்கள் செய்து தர வேண்டும் என விதிமுறை விதிக்கப்பட்டுள்ளது.
முழுவதும் வித்தியாசமாக பணியாளர்களின் உடையில் சில போட்டியாளர்கள் உள்ளனர். ரஞ்சித் மற்றும் முத்துக் குமார் கணவன் மனைவியாக ஸ்டார் ஹோட்டலில் வந்து தங்குபவர்களாக வருகின்றனர். பெண்கள் அணியில் உள்ள பல போட்டியாளர்கள் ஹோட்டல் பணியாளர்களாக உள்ளனர். சத்யா, தீபக் மற்றும் அருண் உள்ளிட்டோர் ஓட்டலில் தங்குபவர்களாக வருகிறார்கள். அவர்கள் கேட்கும் அனைத்தையும் செய்யக்கூடிய கட்டாயத்தில் உள்ளனர். இனி இந்த டாஸ்க் கொடுக்கப்பட்ட காரணத்தால் மேலும் சுவாரசியம் கூடும் என எதிறப்பார்க்கப்படுகிறது.