ரிவஞ்ச் மோடில் கேர்ள்ஸ் டீம்.. பிக்பாஸ் ஸ்டார் ஹோட்டலில் சம்பவம் செய்யும் சூப்பர் மாடல்.. களத்தில் இறங்கும் பாட்டி!
பிக்பாஸ் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க்கில் நேற்று ஆண்கள் அணியினர் பெண்களை அழவிட்ட நிலையில், இப்போது பெண்கள் அதற்கு பழிவாங்கும் முடிவில் உள்ளனர்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 இல் வீட்டில் உள்ள போட்டியாளர்களுக்கு இன்றும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக செயல்பட்டு அங்கு வாடிக்கையாளர்களாக வந்த ஆண்களை முடிந்த அளவு கடுப்பேத்தி இருப்பர்.
ஹோட்டல் ஊழியர்களால் பரபரப்பான பிக்பாஸ் வீடு
உணவு சமைத்து தருவது, வாடிக்கையாளர்களை அழகுபடுத்துவது என நேற்று பிக்பாஸ் வீடே பரபரப்பாக காணப்பட்டது. இதையடுத்து, பிக்பாஸ் வீடு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலாக மாறியுள்ளது. அதில் ஹோட்டல் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என இரு அணி உள்ளது. இங்கு வாடிக்கையாளர்கள் கேட்பதை பணியாளர்கள் செய்து தர வேண்டும் என பிக்பாஸ் விதிமுறையை அமல்படுத்தியுள்ளது.
கணவன் மனைவியான ரஞ்சித்- முத்து
ரஞ்சித் மற்றும் முத்துக் குமார் கணவன் மனைவியாக ஸ்டார் ஹோட்டலில் வந்து தங்குபவர்களாக வருகின்றனர். பெண்கள் அணியில் உள்ள பல போட்டியாளர்கள் ஹோட்டல் பணியாளர்களாக அவர்களுக்கு உதவினர்.