பிக்பாஸ் வீட்டில் கட்டிப் புரளும் ஜோடி.. துடித்த ரஞ்சித்.. கொதித்த நெட்டிசன்கள்..
கில்லர் காய்ன் போட்டியில் ஆண்கள் அணி வெற்றி பெறுவதற்காக சுனிதாவை மடக்கிப் பிடித்த முத்துக்குமரனுக்கு எதிராக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பிக்பாஸ் வீட்டில் நேற்று போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் 5 ஸ்டார் ஹோட்டல் போட்டியில் பங்கேற்றனர். இதில் முதலில் பெண்கள் அணியினர் ஹோட்டல் பணியாளர்களாக விளையாடினர். இதில் வாடிக்கையாளர்களாக வந்த ஆண்கள் அணி அதகளம் செய்திருப்பர்.
கில்லர் காய்ன் டாஸ்க்
இதையடுத்து பிக்பாஸ் வீட்டில் டெய்லி டாஸ்க் குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், ஒல்வர் காய்ன் எனும் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளில் இருந்து 7 போட்டியாளர்கள் பங்கேற்றனர். பெண்கள் அணியிலிருந்து அன்ஷிதாவும் ஆர்ஜே ஆனந்தியும் மேற்பார்வையாளர்களாக இருந்தனர் இந்தப் போட்டியில் பஸ்ஸர் அடிக்கும் போது கில்லர் காய்ன் வைத்திருக்கும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவர் என்ற விதிமுறையுடன் 5 முறை போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் போது, இல்வர் காய்னை வைத்திருக்கும் போட்டியாளர் அடுத்த அணியினர் மேல் இந்த காய்னை ஒட்ட வைக்க வேண்டும் அப்படி செய்தாய் அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
நாமினேஷன் ஃபிரி பாஸ்
தொடர்ந்து 3 நாட்கள் நடத்தப்படும் டெய்லி டாஸ்கில் வெற்றிபெரும் அணிக்கு நாமினேஷன் ஃப்ரி பாஸ் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் வெற்றி பெறும் நோக்கத்தில் மிகவும் பயங்கரமாக விளையாடினர், ஆனால், போட்டி செல்லச் செல்ல ஆண்கள் தங்களின் உடல் பலத்தை காட்டத் தொடங்கினர்.