தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ott Release: போர் தொழில் முதல் டக்கர் வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்ன?

OTT Release: போர் தொழில் முதல் டக்கர் வரை.. இந்த வாரம் ஓடிடி ரிலீஸ் என்ன?

Aarthi HT Tamil
Jul 06, 2023 12:15 PM IST

இந்த வாரம் ஓடிடி ரிலீஸாகும் படங்கள் பற்றி பார்க்கலாம்.

போர் தொழில்
போர் தொழில்

ட்ரெண்டிங் செய்திகள்

சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம் போர் தொழில். பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல புதிய சாதனைகளை படைத்துள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கியுள்ள இப்படம் ஜூலை 7 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. சரத்குமார், அசோக் செல்வன், நிகிலா விமல் நடித்து உள்ளனர். கொலையாளியை தேடும் சவால் மிகுந்த, திரில்லர் பயணத்தை அழகாக படம் காட்டி உள்ளது.

ஃபர்ஹானா

ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ள ஃபர்ஹானா படம் ஓடிடியில் வெளியாகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜூலை 7 ஆம் தேதிசோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. மான்ஸ்டர் மற்றும் ஒரு நாள் கூத்து படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் படத்தை இயக்கி உள்ளார்.

டக்கர்

சித்தார்த் நடித்த டக்கர் படமும் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகிறது. கப்பல் பட இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை 7 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காதர் பாஷா எந்திர முத்துராமலிங்கம்

கொம்பன், மருது, விரும்பன் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் முத்தையா. இவர் இயக்கும் புதிய படமான காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் கடந்த 3 ஆம் தேதி வெளியானது. இதில் ஆர்யா நடிக்க அவருக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகை சித்தி இதானி நாயகியாக நடித்து உள்ளார். ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். இப்படம் ஜூலை 7ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்