தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மைக்கேல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

மைக்கேல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Aarthi V HT Tamil
May 08, 2022 05:48 PM IST

சந்தீப் கிஷன் நடித்து இருக்கும் மைக்கேல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மைக்கேல்
மைக்கேல்

ட்ரெண்டிங் செய்திகள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் கரண் சி புரொடக்சன்ஸ், எல்எல்பி ஆகிய நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து இருக்கிறது. 

ஆக்சன் என்டர்டெய்னர் திரைப்படத்தில் சந்தீப் கிஷன் நடிக்கிறார். இவருடன் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி சிறப்பு அதிரடி வேடத்தில் நடித்திது இருக்கிறார். பிரபல இயக்குநரும், நடிகருமான கௌதம் வாசுதேவ் மேனன் வில்லனாக நடித்து உள்ளார்.  

சந்தீப் கிஷனுக்கு ஜோடியாக நடிகை திவ்யன்ஷா கௌசிக் நடிக்க, நடிகை வரலட்சுமி சரத்குமார் மற்றும் நடிகர் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகி உள்ளது.  ‘மைக்கேல்’ படத்தை நாராயண் தாஸ் கே. நரங் வழங்குகிறார்.

நடிகர் சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு,  'மைக்கேல்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரில் 'கடவுள் மட்டுமே மன்னிக்கிறார்' என்ற வாசகம் இணைக்கப்பட்டு இருக்கிறது. 

இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் சந்தீப் கிஷனின் தோற்றம் ரசிகர்களை வசீகரித்திருக்கிறது. அவரின் சிக்ஸ் பேக் கட்டுடல், கையில் ஏந்தியிருக்கும் ஆயுதம், நீண்ட மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரம்.. ஆகியவை சிறந்த ஆக்ஷன் அவதாரத்தை அவர் திரையில் படைக்கப் போகிறார் என்பதை உறுதிப்படுத்துகிறது. அதனால் இணையத்தில் வெளியான சந்தீப் கிஷனின் 'மைக்கேல்' பட ஃபர்ஸ்ட் லுக்கிற்கு எதிர்பார்ப்பை விட, கூடுதலான வரவேற்பும், ஆதரவும் கிடைத்து வருகிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்