பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 22, 2024 07:35 AM IST

எம்ஜிஆர், விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட், பிராமணர்கள் தடை கோரிய படம்,தமிழ் சினிமாவில் புதிய முயற்சி என இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்டை பார்க்கலாம்.

பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்
பிராமணர்கள் தடை கோரிய படம்..தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! இன்று வெளியான தமிழ் படங்கள் லிஸ்ட்

மகாதேவி

பாடலாசிரியர் கண்ணதாசன் திரைக்கதை எழுத, சுந்தர் ராவ் நத்கர்னி இயக்கியிருக்கும் மகாதேவி படம் 1957இல் வெளியானது. ஆர்.ஜி. கட்காரி புன்ய பிரபாவ் என்ற நாவல் அடிப்படையாக கொண்டு உருவான இந்த படத்தில் எம்ஜிஆர், சாவித்ரி ஆகியோர் ஜோடியாக நடித்திருப்பார்கள்.

பி.எஸ். வீரப்பா, எம்.என். ராஜம், ஜே.பி. சந்திரபாபு, ஓ.ஏ.கே. தேவர் உள்பட பலர் நடித்து ஆக்‌ஷ்ன் ட்ராமா பாணியில் உருவாகியிருந்த இந்த படம் எம்ஜிஆருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. படத்தில் பி.எஸ். வீரப்பா பேசும் மனந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி என்ற வசனம் மிகவும் பிரபலமானது. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. எம்ஜிஆர் நடிப்பில் வெளியான சிறந்த பொழுதுபோக்கு படமாக திகழந்த மகாதேவி படம் வெளியாகி இன்றுடன் 67 ஆண்டுகள் ஆகிறது

சிறை

ஆர்.சி. சக்தி இயக்கத்தில் லட்சுமி, ராஜேஷ், பாண்டியன், இளவரசி உள்பட பலர் நடித்திருக்கும் படம் சிறை. சிறை என்ற பெயரில் அனுராதா ரமணன் எழுதிய சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகியிருந்த இந்த படத்தில் பெரிய ஸ்டார் நடிகர்கள் இல்லாவிட்டாலும் விமர்சக ரீதியாக பாராட்டை பெற்று 100 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது.

படம் ரிலீஸ் சமயத்தில் பிராமண சமூகத்தால் எதிர்ப்பை தெரிவிக்கப்பட்டு, தடை வரை கோராப்பட்டது. 1984இல் வெளியான இந்த படம், 80ஸ் காலகட்டத்தில் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய கதையம்சத்துடன் வெளியான படமாக உள்ளது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண், பாலியல் துன்புறுத்தல் செய்தவர் ஆகியோருக்கு இடையிலான உறவை சொன்ன வித்தியாசமான கதையம்சத்தில் படமாக உருவாகியிருந்தது. சென்சாரில் 10 கட்களுடன் ஏ சர்டிபிக்கேட் பெற்றிருந்த சிறை படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் படம் வெளியாகி இன்றுடன் 40 ஆண்டுகள் ஆகிறது.

குடும்பம்

எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், தேவிஸ்ரீ, ஜெய்சங்கர், சுஜாதா,ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்த பேமிலி ட்ராமா பாணியில் 1984இல் வெளியான படம் குடும்பம். சங்கிலி முருகன், வெண்ணிற ஆடை மூர்த்தி, கள்ளாப்பட்டி சிங்காரம், பசி சத்யா உள்பட பலரும் நடித்திருப்பார்கள். விஜயகாந்த் ஹீரோவாக வளர்ந்து வந்த காலகட்டத்தில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த படமாக குடும்பம் படம் உள்ளது. படத்தில் அனைவரின் நடிப்பும் வெகுவாக பேசப்பட்டது. கங்கை அமரன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

இரண்டாம் உலகம்

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க மிக பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேண்டஸி காதல் கதையாக வெளியான படம் இரண்டாம் உலகம். இரண்டு உலகம் இரண்டு காதல் வித்தியாசமான கதையம்சத்துடன் உருவாகியிருந்த இந்த படம் ஸ்லோவான திரைக்கதையால் கலவையான விமர்சனங்களை பெற்றது.

படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களில் இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா கதாபாத்திரங்கள் இடம்பிடித்திருக்கும். இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். வைரமுத்து பாடல் வரிகள் எழுத ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகின. தமிழ் சினிமாவில் புதிய முயற்சியாக காலத்தை முந்தி கொண்டு வந்த படம் என விமர்சிக்கப்பட்ட இரண்டாம் உலகம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் ஆகிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.