ஏழு முறை தற்கொலைக்கு முயன்றேன்! உள்ளே ஒரு குரல் கேட்கும்! தீர்வு சொன்ன செல்வராகவன்!
சமீப காலமாக இயக்குனர் செல்வராகவன் அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் சில நம்பிக்கையூட்டும் வீடியோக்களையும் பொது நிகழ்வுகளில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை பேசியும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் கடந்த 2002 ஆம் ஆண்டு அறிமுகமானவர் இயக்குனர் செல்வராகவன் இவர் 7g ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக 2022 ஆம் ஆண்டு நானே வருவேன் என்ற படத்தை இயக்கி இருந்தார். இதுவே அவர் கடைசியாக இயக்கிய படமாகும். இப்படத்தில் அவரது சகோதரர் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் படம் இயக்குவதை சிறிது காலம் தள்ளி வைத்து சில படங்களில் நடித்தும் வந்தார்.
மேலும் சமீப காலமாக இயக்குனர் செல்வராகவன் அவரது இன்ஸ்ட்டா பக்கத்தில் சில நம்பிக்கையூட்டும் வீடியோக்களையும் பொது நிகழ்வுகளில் நடக்கக்கூடிய பிரச்சனைகளை பேசியும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் சமீப காலமாகவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது இந்நிலையில் செல்வராகவன் இன்று அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோவில் தற்கொலை எண்ணங்களில் இருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து விளக்கியுள்ளார். மேலும் தானும் ஏழு முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை எண்ணத்தை தவிர்த்து விடுங்கள்
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், 'உலகில் வாழும் அனைவருக்கும் இந்த இரண்டு நிலையை கடக்காமல் இருக்கவே மாட்டார்கள். அதில் ஒன்று தற்கொலை முயற்சி, மற்றொன்று மன அழுத்தம் ஆகியவை ஆகும். இந்த இரண்டு நிலையை நானும் அனுபவித்து உள்ளேன். பல வருடங்களுக்கு முன் நானே 7 முறை தற்கொலைக்கு முயன்று உள்ளேன்.