Actress Savitri : இறுதி நாட்கள் பெரும் துயரம்.. உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actress Savitri : இறுதி நாட்கள் பெரும் துயரம்.. உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று!

Actress Savitri : இறுதி நாட்கள் பெரும் துயரம்.. உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று!

Divya Sekar HT Tamil
Dec 26, 2023 05:00 AM IST

ஆயிரத்தில் ஒருத்தியாக வாழ்ந்த நடிகையர் திலகத்தின் இறுதி நாட்கள் பெரும் துயரம் தரும் முடிவாக அமைந்தது. இன்று அவரின் நினைவுநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று
நடிகை சாவித்ரி நினைவுநாள் இன்று

இளம் வயதிலேயே நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவருக்கு மேடை நாடக வாய்ப்புகளும் வந்தது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வர் அவருக்கு மிகவும் இருந்தது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி ஜெமினி ஸ்டுடியோவுக்கு சென்றவரை நீ எதுக்கு நடிக்க வந்த என ஜெமினி கணேசன் அவமானப்படுத்தி அனுப்பியுள்ளார்.

பின்னாளில் ஜெமினி கணேசனே அவருக்கு கணவராய் அமைந்தது தான் இதில் சுவாரஸ்யமான விஷயம். 1952 ஆம் ஆண்டு 'கல்யாணம் பண்ணிப்பார்' என்ற படம் மூலமாகத்தான் நடிகை சாவித்ரி திரையுலகில் அறிமுகமானார். எம்ஜிஆர் , சிவாஜி கணேசனுக்கு ஈடுகொடுத்து தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் சாவித்ரி.

நடிகை என்பதை தாண்டி, பாடகியாகவும் இயக்குநராகவும் வலம் வந்தார். இது மட்டுமல்ல, அந்த காலத்திலேயே அதிகம் சம்பளம் வாங்கிய நடிகையாக இருந்தவர் இவர். சாவித்ரிக்கு ‘மகாநதி’ என்ற இன்னொரு பெயரும் உள்ளது. இதை வைத்துதான் 2018ஆம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாறும் எடுக்கப்பட்டது. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்ரியின் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார்.

தெலுங்கில் வெளியான மூகமனசுலு படத்தைத் தயாரித்து இயக்க ஆசைப்பட்ட சாவித்திரியிடம் இந்தப் படத்தைத் தமிழில் தயாரிப்பது ஆபத்து ஓடாது நஷ்டம் தான் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்தார் ஜெமினி. ஆனால் ஜெமினி சொன்னதை கேட்காமல் அந்தப் படத்தை சாவித்திரி எடுத்தார். கடைசியில் ஜெமினி சொன்னது போலவே பெரும் நஷ்டத்தைக் கொடுத்தது அப்படம்.

ஜெமினி தன்னுடைய முதல் திருமணத்தை மறைத்து சாவித்திரியை திருமணம் செய்து கொண்டார். பின்னாளில் இது தெரிய வந்து ஜெமினியின் முதல் மனைவி அலமேலு மீது கார் ஏற்றி சாவித்திரி கொல்ல முயன்றதாக ஒரு சம்பவம் கூறப்படுகிறது. பட நஷ்டம் சாவித்திரிக்கு பெரும் மனஉளைச்சலை கொடுத்தது.

அதன் பிறகு வறுமையும் மது பழக்கமும் அவரை சூழ்ந்து கொண்டது. வறுமையின் காரணமாக சாவித்திரி மலையாள மொழி படத்தில் கவர்ச்சியாக குடிகாரியாக நடித்திருந்தது ரசிகர்கள் பலருக்கும் வேதனை அளித்தது.

குடிப்பழக்கத்தால் உடல்நிலை மோசமாகி கிட்டத்தட்ட 19 மாதங்கள் கோமா நிலையில் இருந்தார். சாவித்திரி 1981 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி தன்னுடைய 45 ஆவது வயதில் சென்னை லேடி வெலிங்ஸ்டன் மருத்துவமனையில் உயிரிழந்தார். ஆயிரத்தில் ஒருத்தியாக வாழ்ந்த நடிகையர் திலகத்தின் இறுதி நாட்கள் பெரும் துயரம் தரும் முடிவாக அமைந்தது.

தன்னுடைய இறுதி காலத்தில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இறந்த கதை பெரும் துயரம் என்றே சொல்லலாம். இன்று அவரின் நினைவுநாள். இன்றைய தினம் அவரை நினைவு கூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.