தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga : யமுனாவின் தாலிக்கு வந்த சிக்கல், பூஜாவின் சதியால் காத்திருந்த அதிர்ச்சி!

Meenakshi Ponnunga : யமுனாவின் தாலிக்கு வந்த சிக்கல், பூஜாவின் சதியால் காத்திருந்த அதிர்ச்சி!

Divya Sekar HT Tamil
Jun 03, 2023 11:58 AM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

ட்ரெண்டிங் செய்திகள்

அதாவது, சக்தி யமுனா துர்கா மூவரும் மீனாட்சியை பற்றி சோகமாக பேசிக்கொண்டு இருக்க அங்கே வந்த ஒரு ஊனமுற்ற நபர் இறந்தவர்களைப் பற்றிய பேசிக் கொண்டிருப்பதை விட அவர்கள் செய்த நல்ல காரியத்தை நாம் செய்தால் தான் அவர்கள் ஆன்மாவுக்கு நாம் செலுத்தும் நன்றியாகும் என்று சொல்கிறான்.

இதனை தொடர்ந்து யமுனா, சக்தி, துர்கா என மூவரும் மெஸுக்கு வர அங்கே வெற்றி, உணவு தயார் செய்து பரிமாறிக் கொண்டிருக்கிறான். வெற்றியின் இந்த செயலைப் பார்த்து சக்தி ஃபீல் ஆகி ஓடி வந்து வெற்றியை கட்டிப்பிடித்து அழுகிறாள்.

அப்போது அங்கே வந்த சாந்தா கோவிலில் நடக்க இருக்கும் மீனாட்சி கல்யாணத்தைப் பற்றி சொல்ல அனைவரும் அங்கே செல்கிறார்கள். கோயிலுக்கு புஷ்பா, நீதிமணி மற்றும் சங்கிலியும் வந்திருக்க, பூஜா கோகிலா குடும்பத்தை புஷ்பா மூலமாக கோவிலுக்கு கூப்பிட அவர்களும் வந்து விடுகிறார்கள்.

அப்பொழுது ஆசீர்வாதத்திற்காக தாலியை அனைவரிடவமும் ஐயர் காட்டச் சொல்ல சங்கிலி தாலியை தட்டி விட கீழே விழுந்த தாலியை அவன் எடுத்து மறைத்து வைத்துக் கொள்கிறான். இதனால் சாமியின் தாலி திருடு போய்விட்டது எல்லோரும் தாலியை காட்டுங்கள் என்று கோகிலா சொல்ல அனைவரும் தாலியை காட்ட யமுனா மட்டும் காட்டாமல் மறைத்து வைக்க கோகிலா யமுனாவின் கழுத்தில் மறைவாக இருக்கும் தாலியை பிடித்து இழுக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்