தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Jawan Update: அட்லீயின் மாஸ்டர் ஸ்கெட்ச்; ட்ரெய்லரை வெளியிடும் விஜய்?.. வெளியானது ஜவான் அப்டேட்!

Jawan Update: அட்லீயின் மாஸ்டர் ஸ்கெட்ச்; ட்ரெய்லரை வெளியிடும் விஜய்?.. வெளியானது ஜவான் அப்டேட்!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 09, 2023 11:26 AM IST

ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ தொடர்பான அப்டேட் வெளியாகி இருக்கிறது.

Mark Your Calendars: Shah Rukh Khan's Jawan Prevue to Drop on 10 July at 10:30am
Mark Your Calendars: Shah Rukh Khan's Jawan Prevue to Drop on 10 July at 10:30am

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து ஷாருக்கான் பிரபல இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் கமிட் ஆனார். இந்தப்படத்தின் கதாநாயகியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இசையமைப்பாளராக அனிருத் கமிட் செய்யப்பட்டார். இந்தத்திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானது. மேலும் இந்தத்திரைப்படம் ஜூன் 3ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்த ரிலீஸ் தேதி செப்டம்பர் 7ம் தேதிக்கு தள்ளிப்போனது. இந்த நிலையில் 'ஜவான்' படத்தின் ப்ரிவ்யூ (Prevue) ஜூலை 10ஆம் தேதியன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை ஷாருக்கான் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். முன்னதாக இந்தப்படத்தில் நடிகர் விஜய் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்