டிடிஎஃப் வாசன் ஊரவிட்டே ஓடிட்டான்.. வாதம் வேணாம்.. வதம் பண்ணட்டும்.. எதுகை மோனையில் பேசும் மஞ்சள் வீரன் டைரக்டர்
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு தைரியம் இருந்தால் நேரில் வந்து வாதம் செய்யாமல் வதம் செய்யட்டும் என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் எதுகை மோனையில் பேசியுள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் மஞ்சள் வீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்ற அறிப்பு வெளியாகி அந்தப் படத்தின் புகைப்படங்கள் சில வெளியாகி வந்தது. இதற்கிடையில், படம் தொடர்பான எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், டிடிஎஃப் வாசன் படத்திலிருந்து நீக்கப்படுவதாக அப்படத்தின் இயக்குநர் செல் அம் அறிவித்திருந்தார். மேலும், இப்படத்தின் புதிய கதாநாயகனை விரைவில் அறிமுகப்படுத்துவேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
இந்நிலையில் தான் இன்று, டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்த மஞ்சள் வீரன் படத்திற்கு புதிய கதாநாயகனாக கூல் சுரேஷ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மேலும், படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களுடன் படத்திற்கான பூஜையும் போட்டுள்ளார்.
வாதம் வேண்டாம் வதம் செய்யட்டும்.
இந்த சமயத்தில், மஞ்சள் வீரன் திரைப்பட இயக்குநர் செல் அம் எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி வைரலாகி இருக்கிறது. அதில், டிடிஎஃப் வாசன் நல்லவனா இருந்த இப்படி வாதம் பண்ண வேண்டாம். என்னை நேரில் வந்து வதம் பண்ண சொல்லுங்க என மஞ்சள் வீரன் படத்தின் இயக்குநர் செல் அம் பேசியுள்ளார். நான் அவருடன் நேருக்கு நேர் விவாதம் செய்யட்டும். நான் போகும் அனைத்து இன்டர்வியூவிலும் அவரை கூப்பிட்டு வருகிறேன். ஆளு தமிழ்நாட்டை விட்டே ஓடிவிட்டார். அவர் ஆல் இந்தியா டூர் சென்று கொண்டிருக்கிறார். அவர் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் எல்லாம் நல்லா இருக்காங்க. தமிழ்நாட்டில் டிடிஎஃப் வாசன் இல்லாததினால் இளைஞர்கள் நல்வழியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.