நான் வில்லனா? எல்சியூவில் இணைய ஆசையா இருக்கு.. ஆனா யாரும் என்ன கூப்பிடலையே! பென்ஸ் படம் குறித்து மாதவன் கருத்து
பென்ஸ் படத்தில் வில்லனா நடிக்க யாரும் என்னை அணுகவில்லை என நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார். அத்துடன் எல்சியூவில் இணையவும் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுல்தான் படப்புகழ் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் என்ற படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் மாதவன் நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. இந்த படம் லோகேஷ் கனகராஜ், எல்சியூவின் (லோகேஷ் சினிமாட்டில் யுனிவெர்ஸ்) ஒரு பகுதி எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த படத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என மாதவன் தெரிவித்துள்ளார்.
மாதவன் விளக்கம்
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஹீரோவாக இருந்து வந்த மாதவன்,சில படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். இதையடுத்து பென்ஸ் படத்தில் அவர் வில்லனாக நடிக்க இருப்பதாகவும், இந்த படம் லோகேஷ் கனகராஜ் எல்சியூ உடன் தொடர்புடையதாக இருக்கும் எனவும் கூறப்பட்டது. இந்த தகவல் ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் ரசிகர்களும் ஃபயர் விட்டு கொண்டாடியதோடு, படம் மீது ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக கூறி வந்தனர்.
இதைத்தொடர்ந்து நடிகர் மாதவன் தனது எக்ஸ் பக்கத்தில், பென்ஸ் படத்தின் தான் நடிப்பது குறித்து வெளியாகியிருக்கும் செய்தியை பகிர்ந்து "என்னை பற்றிய இந்த செய்தி பார்க்க ஆர்வமாக உள்ளது. நான் இந்த யூனிவெர்சஸில் அங்கம் வகிக்க விரும்புகிறேன். ஆனாலும் இந்த செய்தி எனக்கு ஆச்சர்யம் அளிப்பதாக உள்ளது. இந்த செய்து பற்றி எந்த யூகமும் இல்லை" என சிரிப்பு எமோஜியுடன் பகிர்ந்துள்ளார்.