பென்ஸ் காரை பரிசாக வழங்கிய ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பென்ஸ் காரை பரிசாக வழங்கிய ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி

பென்ஸ் காரை பரிசாக வழங்கிய ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி

Aarthi V HT Tamil
Mar 18, 2022 02:47 PM IST

ஆல்யா மானசா - சஞ்சீவ் தங்களது சொகுசு காரை உறவினருக்கு பரிசாக வழங்கியுள்ளர்.

<p>ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி</p>
<p>ஆல்யா மானசா - சஞ்சீவ் ஜோடி</p>

இந்த தொடர் மூலம் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் காதலில் விழுந்தனர். இவர்களின் காதலுக்கு ஆலியா வீட்டில் சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் அய்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பிறகு இவர் சிறிய இடைவெளி எடுத்துவிட்டு மீண்டும் சீரியல் பக்கம் திரும்பிவிட்டார்.

இந்நிலையில் தற்போது ஆல்யா , ' ராஜா ராணி 2 ' தொடரில் நடித்து வருகிறார். அதேபோல் சஞ்சீவ் ' கயல் ' தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் சஞ்சீவ் , ஆலியா அடிக்கடி தங்களது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். அது மட்டுமின்றி இவர்கள் தாங்கள் தினமும் செல்லும் இடங்கள் குறித்தும் யூ - டியூப் தளத்தில் வீடியோவாக வெளியீட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சஞ்சீவ் - ஆல்யா பல ஜோடி ரூபாய் செலவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு சொகுசு கார்களை வாங்கினர். வைத்திருக்கின்றனர். அதில் ஒன்றான மெர்சிடெஸ் பென்ஸ் காரை பரிசாக கொடுத்து இருக்கின்றனர். சஞ்சீவ் அந்த காரை தனது சகோதரர் சமீருக்கு அன்பு பரிசாக வழங்கி இருக்கிறார். இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் என்னது பரிசாக பென்ஸ் காரை சஞ்சீவ் கொடுத்து இருக்கிறாரா என அதிர்ச்சியில் வாய்ப் பிளந்து இருக்கின்றனர்.

இதேபோல் குழந்தை பிறந்தவுடன் உடல் எடையை ஆலியா பட் குறைத்து அசத்தியதால் அவர் தனது மகள் அய்லா பிறந்தநாளன்று மினி குப்பர் காரை பரிசாக வழங்கி அசத்தி இருந்தார். நடிகை ஆல்யா மானசா தற்போது இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கிறார்.

இருப்பினும் தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த அவர் , கடந்த சில மாதங்களாகக் குழந்தை பிறக்க போவதால் , ராஜா ராணி 2 தொடரில் இருந்து தற்காலிகமாக விலகி இருக்கிறார். அதனால் அவர் இடத்திற்கு சென்னையைச் சேர்ந்த மாடல் அழகி ஒருவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் ராஜா ராணி 2 சீரியல் குழு வெளியிடவில்லை.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.