தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Leo Troll: 'கைப்புள்ள Bgmம் தான் லியோ தீம் மியூசிக்கா?' தேரை தெருவில் இழுத்துவிட்ட ஹேட்டர்ஸ்!

Leo Troll: 'கைப்புள்ள BGMம் தான் லியோ தீம் மியூசிக்கா?' தேரை தெருவில் இழுத்துவிட்ட ஹேட்டர்ஸ்!

Aarthi V HT Tamil
Sep 28, 2023 10:47 AM IST

BADASS பாடல் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கும் ஆடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.

கைப்புள்ள, லியோ
கைப்புள்ள, லியோ

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தின் ஆடியோ லாஞ்ச் வேலையில் படக்குழுவினர் மிகவும் மும்மரமாக ஈடுபட்டு இருந்தனர். செப்டம்பர் 30 ஆம் தேதி நடக்கயிருந்த இந்த ஆடியோ லாஞ்ச், பாதுகாப்புக் காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆடியோ லாஞ்ச் ரத்து செய்யப்பட்ட என்ன படம் அப்டேட் வெளியாகும் என்ற வகையில் லியோ படக்குழு ஒரு முடிவில் இருக்கிறார்கள்.

அதன் படி படத்தின் இரண்டாவது பாடலான, BADASS இன்று மாலை 6 வெளியாகும் என படக்குழு அறிவித்து உள்ளது. இது தொடர்பான ப்ரோமோ நேற்று வெளியானது.

இந்நிலையில் BADASS பாடல் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கும் ஆடியோவை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். அதாவதது வடிவேலுவின் வின்னர் படத்தில் இடம் பெற்று இருக்கும் பிஜிஎம் போலேவே BADASS பாடல் பிஜிஎமும் அமைந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் இரண்டையும் ஒப்பிட்டு, என்னது லியோ பாடல் காபி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டதா என கலாய்த்து வருகின்றனர்.

ஒரு சிலரோ நாலா பக்கமும் சுத்தி சுத்தி அடிக்கும் பிரச்னை மத்தியில் இது என்ன புதுசா இருக்கிறது என பேசி வருகிறார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்