தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Adipurush: சீதையாக மாறிய கிருத்தி சனோன்.. மாஸ் போஸ்டர் வெளியீடு

Adipurush: சீதையாக மாறிய கிருத்தி சனோன்.. மாஸ் போஸ்டர் வெளியீடு

Aarthi V HT Tamil
Apr 29, 2023 12:44 PM IST

ஆதிபுருஷ் படத்தில் கிருத்தி சனோன் கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது.

கிருத்தி சனோன்
கிருத்தி சனோன்

ட்ரெண்டிங் செய்திகள்

ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் தோற்றம் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டர்கள் விமர்சிக்கப்படும் நேரத்தில், தயாரிப்பாளர்கள் மற்றொரு லேட்டஸ்ட் அப்டேட்டை ஒன்றன் பின் ஒன்றாக கொடுத்து வருகின்றனர்.

இதனிடைடே தற்போது வெளியாகி இருக்கும் சீதை கதாபாத்திரத்தின் போஸ்டரில் கிருத்தி சனோன் தூய்மையையும், தெய்வீகத்தையும், துணிச்சலையும் வெளிக்காட்டும் விதமாக இருக்கிறார்.

கிருத்தி சனோன் போஸ்டர் பார்வையாளர்களை ஆன்மீக பக்தி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தியில் அரசராக இருந்த ராமர், இலங்கை சென்று அனுமன் உதவியோடு கடத்தப்பட்டு வைத்து இருந்த தனது மனைவி சீதாவை மீட்டுக் கொண்டு வந்த கதையே ஆதிபுருஷ் என்ற பெயரில் உருவாகி உள்ளது.

பிரபாஸ் ராமனாகவும் , பாலிவுட் கதாநாயகி கிருத்தி சனோன் சீதையாகவும், சைஃப் அலி கான் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்து உள்ளனர். படத்தை பூஷன் குமார், கிரிஷன் குமார், ஓம் ரவுத், பிரசாத் சுதார் மற்றும் ராஜேஷ் நாயர் ஆகியோர் டி-சீரிஸ் மற்றும் ரெட்ரோபில்ஸ் பேனர்களின் கீழ் தயாரிக்கின்றனர்.

இப்படத்தை தன்ஹாஜி புகழ் ஓம் ராவத் இயக்குகி உள்ளார். இப்படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. ஆதிபுருஷ் படம் ஜூன் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்