தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Movie Release: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்

Movie Release: தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் ரிலீஸாகும் படங்கள்

Aarthi V HT Tamil
Apr 10, 2023 12:40 PM IST

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த வாரம் ரிலீஸ்
இந்த வாரம் ரிலீஸ்

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அருள்நிதி தற்போது நடித்திருக்கும் படம், 'திருவின் குரல்'. இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் ஹரிஷ் பிரபு என்பவர் இயக்கியுள்ளார். இதில் ஆத்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். செவித்திறன் குறைபாடுள்ள மனிதராக அருள்நிதி நடித்து உள்ளார். திருவின் குரல் மெடிக்கல் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது.

ருத்ரன்

நடிகர் ராகவா லாரன்ஸ் தனது மாஸ் அவதாரத்தை ருத்ரன் படத்தில் காண்பிக்க காத்துக்கொண்டு இருக்கிறார். இப்படத்தின் போஸ்டரில் 'தீமை பிறக்காது, படைக்கப்படுகிறது' என்ற டேக்லைனைக் கொண்டு இருப்பதால் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அறிமுக இயக்குநர் கதிரேசன் இயக்கி இருக்கும் இப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ள உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது.

சொப்பன சுந்தரி

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்து இருக்கும் படம், சொப்பன சுந்தரி. டிரெய்லரைப் பார்க்கும்போது, ​​ஒரு கூட்டத்தினர் ஒரு காரை வெல்வது போல் தெரிகிறது, ஆனால் வெற்றியாளரின் பரிசைப் பெற உதவும் பில்லை இழக்கிறது. அதனால் என்ன நடக்கும் என்பதே பட கதையாக இருக்கும். இப்படத்தில் லட்சுமி பிரியா சந்திரமௌலி, ரெடின் கிங்ஸ்லி, தீபா சங்கர், கருணாகரன், சுனில் ரெட்டி, அகஸ்டின் மற்றும் பிஜோர்ன் சுராவ் ஆகியோர் நடித்துள்ளனர். வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்கு படம் வெளியாகிறது.

யானை முகத்தான்

யோகி பாபு மற்றும் ரமேஷ் திலக் நடித்த யானை முகத்தான், விநாயகரைச் சுற்றி வரும் ஒரு கற்பனைத் திரைப்படமாகும். ரமேஷ் விநாயகர் பக்தராக நடிக்கும் போது, ​​யோகி பாபு கடவுளின் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மலையாள இயக்குநர் ரெஜிஷ் மிதிலா தமிழில் அறிமுகமான படம் இதுவாகும். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

தமிழரசன்

நடிகர் விஜய் ஆண்டனி நடித்துள்ள தமிழரசன் படம் ஏப்ரல் 14 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. ரம்யா நம்பீசன் நாயகியாக இதில் விஜய் ஆண்டனி ஒரு சக்தி நிறைந்த பாத்திரத்தில் நடித்து உள்ளார். அவர் போலீஸ் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்களை உள்ளடக்கிய ஒரு பயங்கரமான நெட்வொர்க்குடன் போராடும் கேரக்டரில் நடித்து உள்ளார்.

சாகுந்தலம்

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம், சாகுந்தலம். இப்படம் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் சகுந்தலாவாக சமந்தாவும், துஸ்யந்த் வேடத்தில் மலையாள நடிகர் தேவமோகனும் நடித்து உள்ளனர். மோகன் பாபு, கௌதமி, ஈஷார் ரெப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். சாகுந்தலம் படம் 3 டி வெர்ஷனில் வெளியாக உள்ளது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்