Rajnikanth: ரஜினி யூத் மாதிரி.. யூத் இல்ல.. பாடாய்படுத்திய இயக்குநர்.. அதிர்ச்சியூட்டும் அந்தணன்
Rajnikanth: நடிகர் ரஜினி காந்த் இளைஞர் மாதிரி தான். அவர் இளைஞரே அல்ல. இயக்குநர்கள் அதை மனதில் வைத்துக் கொண்டு படம் எடுக்க வேண்டும் எனக் கூறிய பத்திரிகையாளர் அந்தணன், இயக்குநர் ஒருவராலே ரஜினிக்கு உடல்நலம் பாதித்தது எனக் கூறி அதிர்ச்சியூட்டிள்ளார்.
நடிகர் ரஜினி காந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் இந்த நிலைக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தான் காரணம். அவர், கூலி படத்தின் படப்பிடிப்பில் மழை, வெயில் என பாராமல் ஷீட் செய்துள்ளார். மேலும், விசாகப்பட்டினத்தின் தண்ணீர் ரஜினிக்கு ஒப்புக் கொள்ளவில்லை எனவும் கூறி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.
நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டார். திடீரென்று அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், கவலையடைந்து, அவர் உடல்நிலை தற்போது எப்படி இருக்கிறது என்பது தொடர்பான கேள்விகளை, சமூகவலைதளங்களில் எழுப்பி எழுப்பினர்.
ரஜினிகாந்த் சென்னையில் இருக்கக்கூடிய அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது. ரசிகர்கள் கவலைப்படும் அளவிற்கு அவருக்கு எந்தவிதமான சிக்கலும் இல்லை என்று மருத்துமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான சிகிச்சை
ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட அந்த சிகிச்சையும் எப்போதும் செய்யக்கூடிய ஒரு வழக்கமான சிகிச்சை தான். இது அறுவை சிகிச்சை அல்ல. இதனை Elective procedure என்று அழைக்கிறார்கள். இந்த சிகிச்சையானது அவருக்கு ஏற்பட்ட திடீர் சிக்கலினால் செய்யப்பட்டது அல்ல.
ஏற்கனவே இது திட்டமிடப்பட்டு நடக்கக்கூடிய சிகிச்சை முறை. கிட்டத்தட்ட இரண்டு, மூன்று வாரங்களாகவே இது தொடர்பாக ரஜினிகாந்த் மருத்துவர் உடன் ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். அந்த ஆலோசனையின் வழியாக முடிவெடுத்த அவர், நேற்றைய தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.
ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளது
அதன் படி, நடிகர் ரஜினிகாந்துக்கு அடி வயிற்றுக்கு அருகில் ஸ்டெண்ட் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதயம் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் டாக்டர் சாய், டாக்டர் பாலாஜி மற்றும் டாக்டர் விஜய் தலைமையிலான மருத்துவக்குழுவினர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். அவர்கள் நடிகர் ரஜினியின் உடல் நலம் சீராக இருக்கிறது எனக் கூறினர்.
நன்றி சொன்ன ரஜினி
இதற்கிடையில், சிகிச்சைக்குப் பின் மயக்கத்திலிருந்து கண் விழித்த ரஜினிகாந்த் தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட உடன் கார்டியாக் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் எனவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகிறது.
இந்த சமயத்தில் பத்திரிகையாளர் அந்தணன் கூறிய தகவல்கள் ரஜினி ரசிகர்களை பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
லோகேஷால் தான் இந்த பிரச்சனை
அதில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து கூலி படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. சுமார் 74 வயதான நடிகர் ரஜினிகாந்த் பார்ப்பதற்கு இளைமையாக இருக்கலாம். ஆனால் அவர் இளைஞர் இல்லை. இதை கருத்தில் கொண்டு அவர் படம் எடுத்திருக்க வேண்டும்.
ஆனால், லோகேஷ் அவரை மழையில் நனையும் படியான காட்சியில் நடிக்க வைத்துள்ளார். ஏற்கனவே அவருக்கு விசாகப்பட்டினத்தின் தண்ணீர் ஒத்துக் கொள்ளாததால், சென்னையிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கும். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு இனி இயக்குநர்கள் படம் எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.