Rajinikanth: ‘நீ கலக்கு சித்தப்பு’ .. ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா! - ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு!
Rajinikanth: ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா!ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சேர்மன் முகமது கலிஃபா அல் முபாராக், கோல்டன் விசாவை நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினார்.
Rajinikanth: அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில், ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில், பிரபல நடிகர் ரஜினிகாந்திற்கு கோல்டன் விசா வழங்கப்பட்டது. கோல்டன் விசா வழங்கியதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி தெரிவித்தார் ரஜினிகாந்த்.
நன்றி தெரிவித்த ரஜினிகாந்த்
ஐக்கிய அரபு அமீரக கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் சேர்மன் முகமது கலிஃபா அல் முபாராக், கோல்டன் விசாவை நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கினார். அவர்களுடன் மலையாள தொழிலதிபர் எம். ஏ யூசுப் அலி இருந்தார். யூசப் அலி அதற்கான நடைமுறைகளை அண்மையில் முடித்ததாக சொல்லப்படுகிறது.
விசாவை வாங்கிக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து, இந்த விசாவை வாங்குவதில் பெருமை கொள்வதாக பேசினார். அதற்கான நடைமுறைகளை கையாண்ட யூசப் அலிக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். துபாய் சென்று இருந்த ரஜினிகாந்த் அங்கு முதன்முறையாக கட்டப்பட்டு இருக்கும் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயில் மற்றும் ஷேக் சயீத் கிராண்ட் மசூதி ஆகியவற்றிற்கு சென்று பார்வையிட்டார்.