சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு நடிகை மீனா மீது ஏன் இவ்வளவு பிரியம்?
- திரையுலகில் தனிப்பட்ட முறையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பிரியமாகவும் பாசத்துடனும் பழகினார் என்றால் அது நடிகை மீனாவுடன்தான்.
- திரையுலகில் தனிப்பட்ட முறையில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பிரியமாகவும் பாசத்துடனும் பழகினார் என்றால் அது நடிகை மீனாவுடன்தான்.
(3 / 18)
1982 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் வெளியான எங்கேயோ கேட்ட குரல் படத்தின் மூலம் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக தமிழ்த்திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படத்தில் ரஜினிகாந்தின் மகளாக மீனா நடித்திருந்தார்.
(4 / 18)
1984 ஆம் ஆண்டில் ரஜினியின் நண்பர் கே.நட்ராஜ் இயக்கத்தில் வெளியான அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினிகாந்துடன் மீனா நடித்த படம் மெகா ஹிட் ஆனது. இந்தப்படத்தின் மூலம் ரஜினிக்கும் மீனாவுக்கும் அளவற்ற பாசபந்தம் ஏற்பட்டது.
(5 / 18)
1993ஆம் ஆண்டு ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் வெளியான எஜமான் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்தார்.
(6 / 18)
மகள் கேரக்டரில் நடித்த மீனாவுடன் கணவராக நடித்தது ரஜினி ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியது எஜமான் படம். இருப்பினும் படம் கமர்ஷியலாக வெற்றி பெற்றது.
(7 / 18)
எஜமான் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மீனா பெற்றார்.
(8 / 18)
1997ஆம் ஆண்டு பொற்காலம் படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பெற்றார் நடிகை மீனா.
(9 / 18)
1996 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரிடம் ஆசியும் ஆட்டோகிராபையும் பெற்றார் மீனா.
(10 / 18)
1994 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான வீரா படத்தில் ரஜினிகாந்துடன் கொஞ்சும் தமிழில் மீனா நடித்திருந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற 'கொஞ்சி கொஞ்சி அலைகளோடு' பாடல் இந்நாள் வரை மக்களால் முணுமுணுக்கப்படுகிறது.
(11 / 18)
1995 ஆம் ஆண்டில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான முத்து திரைப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இதில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். இந்தப்படத்தில் இடம்பெற்ற 'இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரு' என்ற வசனம் இன்றளவுக்கும் ரசிகர்களிடையே பிரபலமாக உள்ளது.
(12 / 18)
நடிகை மீனாவுக்கும் அவரது கணவர் வித்யா சாகருக்கும் திருப்பதி திருமலை கோயிலில் திருமணம் நடைபெற்றது. சென்னை திரும்பியவுடன் ரஜினி வீட்டுக்குச் சென்று ஆசி பெற்றார் மீனா.
(13 / 18)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இல்ல விசேஷங்களில் தவறாமல் பங்கேற்கும் நடிகை மீனா, ரஜினி மகள் சௌந்தர்யா திருமணத்துக்கு கணவர் வித்யா சாகருடன் சென்று கலந்து கொண்டார். ரஜினி வீட்டு விசேஷங்களில் பங்கேற்பது தனக்கு அளவற்ற மகிழ்ச்சியையும், மனநிம்மதியையும் தருவதாக மீனா குறிப்பிட்டுள்ளார்.
(14 / 18)
மீனாவின் மகள் நைனிகாவின் ஒரு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸாக சென்ற நடிகர் ரஜினிகாந்த் நைனிகாவுக்கு கேக் ஊட்டி விட்டு பரிசுப் பொருளையும் தந்தார்.
(15 / 18)
தனது சொந்த மகள்களான சௌந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோரின் திருமணங்கள் முறிந்து போனதில் சூப்பர்ஸ்டாருக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனது மகளைப் போன்று பாசம் வைத்திருந்த நடிகை மீனாவின் கணவர் திடீரென மறைந்தது ரஜினிக்கு மேலும் வேதனை கூடியது. மீனாவின் கணவருக்கு இறுதியஞ்சலி செலுத்த அவரது வீட்டுக்குள் செல்லும்போது தன்னையும் அறியாமல் கண்கலங்கிவிட்டார். பொதுவெளியில் ரஜினிகாந்த் இதுபோல வேதனையுடன் கண்ணீர் விட்டது இதுவே முதல் முறையாகும்.
(16 / 18)
திரையுலகில் நடிகை மீனாவுக்கு பெரும் பக்க பலமாக ரஜினி திகழ்ந்தார். அவரது ஊக்குவிப்பின் மூலம் தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடிகை மீனா நடித்தார். இரு மொழிகளிலும் மீனாவுக்கு நல்ல வாய்ப்புகளும் ரசிகர்கள் பட்டாளமும் கிடைத்தன.
(17 / 18)
கடைசியாக தான் நடித்த அண்ணாத்தே படத்திலும் நடிகை மீனாவுக்கு ஒரு சுவாரஸ்யமான கதாபாத்திரத்தை ரஜினி பெற்றுத்தந்தார்.
மற்ற கேலரிக்கள்