ஜெயிலர் 2 அப்டேட்..நிறைவேறும் கனவு படம் ஆசை! மரண மாஸ் வெயிடிங்கில் இருக்கும் தனுஷ் படங்கள்
ஜெயிலர் 2 அப்டேட் ஆக தனுஷ் முக்கிய கேரக்டரில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. இதற்கிடையே மரண மாஸ் வெயிட்டிங்கில் இருக்கும் தனுஷ் படங்கள் பற்றி பார்க்கலாம்

கோலிவுட் ஹீரோக்களில் நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்குநர், பாடலாசிரியர் என எப்போதும் பிஸியாகவே இருந்து வரும் நடிகராக தனுஷ் இருக்கிறார். தற்போது இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னட கோபம் படங்களில் இயக்கும் பணிகளுடன், குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் தனுஷ்?
இதையடுத்து ஜெயிலர் 2 படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. இந்த படத்தின் ப்ரீ புரொடக்சன் பணிகளில் இயக்குநர் நெல்சன் ஈடுபட்டு வருவதாகவும், தற்போது படத்தில் தனுஷை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஜெயிலர் 2 படத்தில் நடிக்க தனுஷும் சம்மதம் தெரிவித்துள்ளாராம்.
ஏற்கனவே ரஜினியுடன் இணைந்து பல முறை தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் இதுவரை அது நடக்கவே இல்லை. தற்போது மீண்டும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தனுஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது கூலி படத்தில் நடித்து வரும் ரஜினியின் அடுத்த படம் யாருடன் என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.