தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Shah Rukh: களைகட்டிய ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி: Vibe செய்த தீபிகா, ரன்வீர், ஆலியா

Shah Rukh: களைகட்டிய ஷாருக்கானின் பிறந்தநாள் பார்ட்டி: Vibe செய்த தீபிகா, ரன்வீர், ஆலியா

Marimuthu M HT Tamil
Nov 03, 2023 11:56 AM IST

ஷாருக்கான் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடிய பிறகு, பாலிவுட் நண்பர்களான தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் பலருடன் சேர்ந்து பார்ட்டி செய்தார்.

ஷாருக்கானின் நட்சத்திரங்கள் நிறைந்த பிறந்தநாள் விழாவில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் ஷாஹீன் பட் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஷாருக்கானின் நட்சத்திரங்கள் நிறைந்த பிறந்தநாள் விழாவில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆலியா பட் மற்றும் ஷாஹீன் பட் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

மேலும், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் ஆலியா பட் ஆகியோரும் ஷாருக்கானின், பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டனர்.

இந்த பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் ஃபௌசியா அடீல் பட், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் இது தொடர்பாகப் பதிவிட்டுள்ளார். 

மேலும் தீபிகா படுகோன் , ரன்வீர், ஆலியா மற்றும் அவரது சகோதரி ஷஹீன் பட் மற்றும் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் கிரிக்கெட் வீரர் எம்.எஸ். தோனி ஆகியோரும் இவ்விழா குறித்த புகைப்படங்களை, தங்களது சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். 

ஷாருக்கானின் பிறந்தநாள் விழா விருந்துக்கு ஆலியா பட் மற்றும் மீரா கருப்பு உடையில் வந்திருந்தனர்.

ஆலியா பட், எம்எஸ் தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர்
ஆலியா பட், எம்எஸ் தோனி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் அட்லீ ஆகியோர்

கரீனாவும் கரிஷ்மாவும்:

முன்னதாக, கரீனா கபூர், அவரது சகோதரி கரிஷ்மா கபூர் மற்றும் அம்ரிதா அரோராவுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பான இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் கரீனா பகிர்ந்துள்ளதாவது, "சினிமாவைக் கொண்டாடுகிறோம். பாட்ஷா நாங்கள் உங்களுக்காகத் தயாராக இருக்கிறோம்" என்று எழுதினார்.

மேலும் கரிஷ்மாவோ , "எங்கள் அன்பான நண்பர்களைக் கொண்டாடுகிறோம்" என்று எழுதினார்.

பிறந்த நாள் விழாவில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் மற்றும் மீரா ராஜ்புத் ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர்.
பிறந்த நாள் விழாவில் கரீனா கபூர், கரிஷ்மா கபூர் மற்றும் மீரா ராஜ்புத் ஆகியோர் போஸ் கொடுத்துள்ளனர்.

ஷாருக்கானின் 58வது பிறந்தநாள்

பாலிவுட் நண்பர்களுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஷாருக்கான் தனது பிறந்த நாளை மும்பையில் ரசிகர்களுடன் கொண்டாடினார். அவர் பகிர்ந்த ஒரு வீடியோவில், பதானில் இருந்து ஜூமே ஜோ பதான் மற்றும் ஜவானில் இருந்து ராமையா வஸ்தாவய்யா ஆகியப் பாடல்களுக்கு நடனமாடுவதைக் காணலாம். அடுத்த படமான டன்கிக்கு தயாராகி வரும் ஷாருக், இன்ஸ்டாகிராம் பதிவில், "உங்கள் அனைவருடனும் கொண்டாடுவது எப்போதுமே ஸ்பெஷல்.. எனது நாளை உருவாக்கியதற்கு நன்றி" என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

பின்னர் நள்ளிரவில் ஷாருக்கானின் இல்லத்தில் நடந்த பார்ட்டியில் கலந்துகொண்ட நடிகர் ஷாருக்கான், "உங்களில் பலர் தாமதமாக வந்து என்னை வாழ்த்துவது நம்பமுடியாதது. நான் ஒரு நடிகர். நான் உங்களை கொஞ்சம் மகிழ்விக்க முடியும் என்பதை விட வேறு எதுவும் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. நான் உங்கள் கனவில் வாழ்கிறேன். உங்கள் அனைவரையும் மகிழ்விக்க என்னை அனுமதித்தமைக்கு நன்றி’’ என்று கூறினார். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point