எனக்கு உங்கள் நாமினேஷன் பாஸ் தேவையில்லை.. கோபத்தின் உச்சிக்கு சென்ற ஜாக்குலின்.. இந்த வார எலிமினேஷன் யார்?
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகாமல் காப்பாற்றப்பட வேண்டிய நபர் யார் என்பது குறித்து பெண்கள் அணி முடிவு செய்து வருகின்றனர்,
பிக்பாஸ் வீட்டின் 4வது வாரம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இந்த வார நாமினேஷன் பட்டியலில் உள்ள பிக்பாஸ் வீட்டிலுள்ள பெரும்பான்மையான போட்டியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
நாமினேஷன் லிஸ்ட்
பிக்பாஸ் வீட்டின் நான்காவது வாரத்திற்கான நாமினேஷன் கடந்த திங்கட் கிழமை நடந்தது. இதில் பெண்கள் அணியினர் ஆண்கள் அணியையும், ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினரையும் நாமினேட் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் ஒவ்வொருவராக யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என்றும் அதற்கான காரணத்தையும் கூறினர்.
அதன்படி, பிக்பாஸ் வீட்டிலுள்ள அருண், ஜாக்குலின், சத்யா, ரஞ்சித், பவித்ரா, சுனிதா, ஜெஃப்ரி மற்றும் நேரடியாக நாமினேட் செய்யப்பட்ட அன்ஷிதா, தீபக் என 9 போட்டியாளர்கள் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
வெற்றி பெற்ற பெண்கள் அணி
இதைத் தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டில் ஆள் மாறாட்டம் எனும் வீக்லி டாஸ்க், நாமினேஷன் ஃபிரி பாஸிற்கான டாஸ்க்குகள் நடத்தப்பட்டது. அதில், இந்த வாரமும் பெண்கள் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து, பிக்பாஸ் இன்று பெண்கள் அணியிடம் முக்கிய அறிவிப்பை கூறியுள்ளது. அதில், பெண்கள் அணியினர், தாங்கள் வென்ற நாமினேஷன் ஃபிரி பாஸை வைத்து யாரை எலிமினேஷனில் இருந்து காப்பாற்றப் போகிறீர்கள் என்பதை முடிவு செய்து தெரிவிக்க வேண்டும் எனக் கூறியது.
நாமினேஷன் ஃபிரி பாஸ்
இதனால், பெண்கள் அணியில் மீண்டும் பிரச்சனை தலை தூக்க ஆரம்பித்துள்ளது. நாமினேஷன் ஃபிரி பாஸ் குறித்த ஆலோசனையில் ஈடுபட்ட பெண்கள் அணியினரிடம் ஒரு வெறுமை தென்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக நடத்தப்பட்ட ஆள் மாறாட்ட டாஸ்க்கால், சக போட்டியாளர்கள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றனர் என்பதை அனைத்து போட்டியாளர்களும் தெரிந்து கொண்டனர்.
வெறுப்பில் பெண்கள் அணி
இதனால், அவர்களுக்கு இடையேயான பரஸ்பர அன்பு தற்போது இல்லாமல் போனது பார்க்கும் அனைவருக்கும் அப்பட்டமாக தெரிகிறது. இந்நிலையில், நாமினேஷன் பாஸ் குறித்த பேச்சுவார்த்தையில், அன்ஷிதாவை இந்த எலிமினேஷனில் இருந்து காப்பாற்ற வேண்டும் என தர்ஷிகா தனது முடிவை தெரிவித்துள்ளார். அன்ஷிதா 2 முறை நாமினேஷன் பட்டியலில் இடம்பிடித்ததால், அவரை நாம் காப்பாற்ற முயற்சி எடுக்க வேண்டும் என்றார். இதையடுத்து பேசிய ஆனந்தி, பவித்ராவை நாமினேஷன் பாஸ் மூலம் எலிமினேஷில் இருந்து காப்பாற்றலாம் எனக் கூறினார்.
பெண்கள் அணி யாரைக் காப்பாற்ற போகிறகு ?
தொடர்ந்து பேசிய சாச்சனா, அன்ஷிதாவா அல்லது பவித்ராவா என வரும்போது எனக்கு இருவரையும் காப்பாற்றத் தோன்றுகிறது. இருவருமே எலிமினேஷன் ஆகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது எனக் கூறினார். தொடர்ந்து பேசிய பவித்ரா, இந்த முறையும் ஜாக்குலின் எலிமினேட் செய்யப்பட மாட்டார் என நினைப்பதாகக் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ஜாக்குலின் எனக்கு இதுபோன்று விளையாட வேண்டாம் எனக் கோவமாக கருத்து தெரிவித்தார்.
பின் இறுதியில் தனது முடிவைக் கூறிய அன்ஷிதா, எனக்கு ரொம்பப் பேச எதுவும் இல்லை, எனக்கு இந்த நாமினேஷன் பாஸ் வேண்டாம் என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதன் மூலம் இவர் தொடர்ந்து 2 வாரங்களாக நாமினேஷன் பாஸை ஏற்க மறுத்துள்ளது தெரிகிறது.
டாபிக்ஸ்