தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  I Will Not Be Afraid Of Personal Attacks Gayathri Raghuram Response To Tamil Nadu Bjp Leader Annamalai

Gayathri vs Annamalai:‘பயந்துருவேன்னு நினைச்சியா அண்ணாமலை’ - கொந்தளித்த காயத்ரி

Kalyani Pandiyan S HT Tamil
Jan 28, 2023 12:32 PM IST

“நானும் உங்களுக்கு 4 புகைப்படங்களை தருகிறேன்- இரவில் நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன் மற்றும் தூங்குகிறேன் என்று வதந்திகளை பரப்புங்கள்” - காயத்ரி ரகுராம்

அண்ணாமலை, காயத்ரி
அண்ணாமலை, காயத்ரி

ட்ரெண்டிங் செய்திகள்

அரசியல் என்ட்ரி

இதனிடையே கடந்த 2014 ஆம் ஆண்டு பாஜக கட்சியில் சேர்ந்த காயத்ரி ரகுராம் தீவிர அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். முன்னதாக தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக புதிய பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து தமிழக பாஜவில் உட்கட்சி பூசல்கள் தொடங்கின. அண்ணாமலை சீனியர்களை புறக்கணிப்பதாக செய்திகள் பரவின; இதில் காயத்ரி ரகுராமும் ஒருவர் என சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் அண்ணாமலை. இதனையடுத்து நடிகை காயத்ரி ரகுராம் வெளியிட்ட அறிக்கை சர்ச்சையானது. அந்த அறிக்கையில், “ என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி, என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி. என்னால் திரும்ப கொண்டுவர முடியாத இளமைக் காலத்தை பறித்ததற்கு நன்றி, என் தனிப்பட்ட வாழ்க்கையை பறித்ததற்கு நன்றி, பாதுகாப்பை தராததற்கு நன்றி. எனக்கு துரோகம் செய்த பாஜகவுக்கு நன்றி, நீதி வழங்காததற்கு மிக்க நன்றி. கடவுள் உங்களை பார்த்துக்கொள்வார். நீங்கள் அனைவரும் என்னிடம் செய்தது தவறு என்பதை தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு பதில் சொல்வார்கள். நான் என் தர்மத்தை நிலைநாட்டுவேன். விரைவில் களத்தில் சந்திப்போம்” என அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

அண்ணாமலைக்கு எதிராக யாத்திரை

தொடர்ந்து, திருச்செந்தூரில் இருந்து தமிழ்நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் 14 ஆம் தேதிஅண்ணாமலை யாத்திரை செல்ல திட்டமிட்டு இருக்கும் நிலையில், அதே நாளில் அண்ணாமலைக்கு எதிராக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை யாத்திரை தொடங்கப்போவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆடியோ லீக்

இதனிடையே சமீபத்தில் கோவையைச் சேர்ந்த சரஸ்வதியுடன் இவர் பேசிய ஆடியோவும் லீக்காகி சமூகவலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் தற்போது அண்ணாமலையை விமர்சித்து நடிகை காய்த்ரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துக்களை முன்வைத்துள்ளார்.

வதந்திகளை பரப்புங்கள்

 

அவையாவன, “ அண்ணாமலையின் அறிவுறுத்தலின்படி தினம் தினம் அவரது யூடியூப் சேனல்கள் என்னைப் பற்றி தவறாகப் பேசி வருகிறார்கள். நானும் உங்களுக்கு 4 புகைப்படங்களை தருகிறேன்- இரவில் நான் அவர்களை தனிப்பட்ட முறையில் சந்திக்கிறேன் மற்றும் தூங்குகிறேன் என்று வதந்திகளை பரப்புங்கள். அதை செய்ய உனக்கு தைரியம் இருக்கிறதா அண்ணாமலை? வதந்திகளை கண்டு நான் பயப்படுவேன் என்று நீங்கள் நினைத்தால், im very sorry நான் பயப்படவில்லை.. உனக்கு மட்டும் பெற்றோர் இருப்பது போல், வேறு யாருக்கும் பெற்றோர் இல்லாதது போல் நீங்கள் கல்லூரியில் பேசிய பேச்சுக்கு மகிழ்ச்சி. அதே போல்,நீங்கள் என்னை பற்றி பரப்பும் வதந்திகளை என் தாயும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு பெண்களின் தாயும் உங்களை சபிக்க விரும்பாவிட்டாலும், அறியாமல் வரும் சாபம் ஆபத்தானது என்று சிந்தியுங்கள். உங்கள் தவறுகளுக்காக நீங்கள் வருந்துவீர்கள். நீங்கள் கர்மாவை எதிர்கொள்வீர்கள். உங்கள் தனிப்பட்ட மனித தாக்குதல் எனது கேள்விகளிலிருந்தும் மற்றும் எனது சவாலிலிருந்தும் திசை திருப்புவதற்காக மட்டுமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.” என்று அவர் அதில் குறிப்பிட்டு இருக்கிறார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்