தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Father's Day Songs: தந்தையின் தியாகத்தை போற்றுவோம்: நெஞ்சை உருக வைக்கும் பாடல்கள் இதோ..!

Father's Day Songs: தந்தையின் தியாகத்தை போற்றுவோம்: நெஞ்சை உருக வைக்கும் பாடல்கள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jun 18, 2023 11:28 AM IST

Father's Day Special Songs: தந்தையின் தியாகத்தை போற்றும் இத்தினத்தில் தந்தைக்கு டெடிகேட் செய்யும் வகையிலான சில பாடல்களை இங்கு காணலாம்.

தந்தையர் தின சிறப்பு பாடல்கள்.
தந்தையர் தின சிறப்பு பாடல்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

தன்னலம் பார்க்காமல் குடும்பத்துக்காக உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் விதமாக ஜூன் மூன்றாவது ஞாயிறு (ஜூன் 18) உலக தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் 1909 ஆம் ஆண்டு சொனாரா லூயிஸ் என்பவர் முதலில் தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை தெரிவித்துள்ளார். ஏனேனில், இவரது தாய் தன்னுடைய ஆறாவது பிரசவத்தின் போது மரணமடைந்துள்ளார். தந்தை வில்லியம், ஆறு குழந்தைகளை பெரும் சிரமங்களுக்கு இடையே பராமரிப்பதை கண்டார். இதான் இத்தினத்தை கொண்டாடும் எண்ணத்தை தூண்டியதாக கூறப்படுகிறது.

வீட்டுக்கான கடமையை தாய் சொல்லிக் கொடுத்தாலும், வீட்டுக்கும், நாட்டுக்கும் சமூகத்திற்கான கடமையை தந்தையின் வழியே பல குழந்தைகள் கற்றுக்கொள்கின்றனர். அதனாலே தந்தைக்கும் பொறுப்பு கூடிவிடுகிறது. அதனால் தான் நமது இலங்கியங்களில் தாய்க்கு இணையாக தந்தையும் போற்றப்படுகிறார்.

தந்தையின் தியாகத்தை போற்றும் இத்தினத்தில் தந்தைக்கு டெடிகேட் செய்யும் வகையிலான சில பாடல்களை இங்கு காணலாம்..!

வா வா என் தேவதையே... (அபியும் நானும்)

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... (தங்கமீன்கள்)

ஆரீரோ ஆராரீரோ... (தெய்வத்திருமகள்)

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்... (கேடி பில்லா கில்லாடி ரங்கா)

ஒரே ஒரு ஊருக்குள்ளே... (தவமாய் தவமிருந்து )

குறும்பா...(டிக் டிக் டிக்)

உனக்கென வேணும் சொல்லு..உலகத்தை காட்ட சொல்லு..(என்னை அறிந்தால்)

அன்புள்ள அப்பா அப்பா.. (சிகரம் தொடு)

IPL_Entry_Point

டாபிக்ஸ்