தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sk 21 Update: சிவகார்த்திகேயன், கமல் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

SK 21 Update: சிவகார்த்திகேயன், கமல் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா?

Aarthi V HT Tamil
May 03, 2023 01:01 PM IST

நடிகர் சிவகார்த்திகேயனின் 21 ஆவது பட அப்டேட் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

ட்ரெண்டிங் செய்திகள்

இதை தொடர்ந்து அவர் நடித்து முடித்த ‘அயலான்’ திரைப்படம் தீபாவளி பண்டிகை விடுமுறையில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் ஏலியன் முக்கிய கதாபாத்திரம் வகிப்பதால் அதற்கான கம்யூட்டர் கிராபிக்ஸ் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து சிவகார்த்திகேயனின் 21 ஆவது படத்தை கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்ஸ் உடன் இணைந்து சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கவிருக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான வேலைகளில் படக்குழு தற்போது தயாராகி வருகிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 21 ஆவது பட இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அட்டகாசமான மோஷன் போஸ்டருடன், மியூசிக் சேர்த்து படக்குழு அறிவித்துள்ளனர். இந்த செய்தி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து ஜிவி பிரகாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், “கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனுடன் வேலை பார்க்க ஆவலுடன் உள்ளேன். நிச்சயம் இது மிகப்பெரிய படமாக அமையும். இந்த கூட்டணிக்காக ஆவலுடன் உள்ளேன்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

IPL_Entry_Point

டாபிக்ஸ்