G.V. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...-gv prakash give update for actor sivakarthikeyan amaran movie first song - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  G.v. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...

G.V. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...

Malavica Natarajan HT Tamil
Sep 24, 2024 03:27 PM IST

G.V. Prakash: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்றை அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வழங்கியுள்ளார்.

G.V. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...
G.V. Prakash: பாட்டு இப்படி தான் இருக்கும்... ஆர்மி மேனின் காதலுக்கு அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்...

அமரன் ஃபர்ஸ்ட் சிங்கிள்

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்பேட் ஒன்றை ஜி.வி. பிரகாஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், அமரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் நிச்சயம் காதல் பாடலாகத்தான் இருக்கும். இந்தப் பாடலுக்கு ஹே மின்னலே என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார்.

இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜி.வி. பிரகாஷின் இசை பலரது வாழ்க்கையில் மேஜிக் செய்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால் பாடல் வெளியீட்டிற்காக பலரும் காத்துள்ளனர்.

ராணுவ வீரரின் பயோபிக்

தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகிறது. இதில், முகுந்தன் என்ற கதாப்பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

எப்போது ரிலீஸ்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது டப்பிங் உள்ளிட்ட படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படத்தின் ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.

அமரன்

இந்தப் படத்திற்கான திரைக்கதை எழுதும் போது, இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதிய முதல் வார்த்தை அமரன் என்பதால் இந்தப் பெயரையே படத்திற்கு வைக்க வேண்டும் என உறுதியாக இருந்துள்ளார். அமரன் என முன்னதாகவே தமிழ்படம் ஒன்று வெளியாகி இருந்த போதிலும் இவர் இந்த தலைப்பிற்காக உறுகியாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமரன் படக்குழு, கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்டு, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்த நிலையில், தற்போது, படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடல்களுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

விஜய் இடத்தை பிடிப்பாரா சிவா

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் கோட். நடிகர் விஜய் முழுநேர அரசியலுக்குள் நுழைய இருப்பதாக அறிவித்த பின் வெளியான திரைப்படம் என்பதால் இந்தப் படத்திற்கு கூடுதல் மவுசு இருந்து வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய், தனக்கு பின் தமிழ் சினிமாவில் தனது வாரிசாக சிவகார்த்திகேயன் வரவேண்டும் என ஆசைப்படுவதாக பல தகவல்கள் வெளியாகி வந்தன. 

இந்நிலையில், தான் கோட் படத்தில் கௌரவ தோற்றமாக சிவகார்த்திகேயன் வந்தார். அப்போது, விஜய், இந்த துப்பாக்கியை புடிச்சுக்கோங்க. இனி எல்லாம் உங்க கையில தான்னு வசனம் பேசுவார். இந்த வசனம் அந்தப் படத்தில் மட்டும் அல்ல. நிஜ வாழ்க்கைக்குமானது என பலரும் கூறி வருகின்றனர். ஏற்கனவே, சிவகார்த்திகேயன் விஜய் பாணியை ஃபாலோ செய்கிறார் என்ற கருத்து உலா வரும் நிலையில், விஜயிடமிருந்தே இந்த வார்த்தை வந்துள்ளதால், சிவகார்த்திகேயனின் அமரன் படத்திற்கு கூடுதல் ஆதரவு பெருகியுள்ளதாகவே தெரிகிறது.

Whats_app_banner