Amaran: ‘துப்பாக்கி ஏந்தி நின்னான்பாரு..’: நிறைவுபெற்ற சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் படப்பிடிப்பு
Amaran: நிறைவுபெற்ற சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Amaran: சிவகார்த்திகேயன் நடித்து வந்த அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முழுமையாக நிறைவடைந்துள்ளது எனப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்கே 21 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகி, இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. படத்தின் பெயர், அமரன் என இந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமரன் கேரக்டரில் ராணுவ வீரனாக சிவகார்த்திகேயன்
இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த அமரன் படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாக தோன்றியுள்ளார்.