Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்-check out the top trending song of composer g v prakashkumar - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்

Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2024 08:40 AM IST

Top Tamil GV Prakash Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே என ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் டாப் ட்ரெண்டிங் பாடல்கள் லிஸ்ட் எவை என்பதை பார்க்கலாம்.

Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்
Top Tamil Songs: தங்கலான் மினிக்கி மினிக்கி, லக்கி பாஸ்கர் கொல்லாதே..ஜி.வி. பிரகாஷ் டாப் ட்ரெண்டிங் பாடல்கள்

மினிக்கி மினிக்கி

பா. ரஞ்சித் இயக்கிய தங்கலான் படத்தில் இடம்பிடித்திருக்கும் மினிக்கி மினிக்கி பாடல் பட்டிதொட்டி யெங்கும் ஒலிக்கும் பாடலாக மாறியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த பாடலுக்கு உமா தேவி பாடல் வரிகள் எழுத சிந்தூரி விஷால் பாடியுள்ளார். அற்புத ஃபோக் இசை பாடலாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

லக்கி பாஸ்கர் டைட்டில் டிராக்

துல்கர் சல்மான் , மீனாட்சி செளத்ரி நடிப்பில் தெலுங்கில் உருவாகி வரும் படம் லக்கி பாஸ்கர். வெங்கி அட்லூரி இயக்கத்தில் த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படம் தமிழிலும் வெளியாகவுள்ளது.

வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கும் இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஜூலை மாதம் படத்திலிருந்து லக்கி பாஸ்கர் டை்டில் டிராக் வெளியானது. வனிமாளி, பாலாஜி வேணுகோபால் பாடல் வரிகள் எழுத உஷா உதூப் பாடியிருக்கும் டைட்டில் டிராக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தங்கலான் - வார் சாங்

தங்கலான் படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு பாடலாக இந்த வார் சாங் உள்ளது. அறிவு பாடல் வரிகள் எழுத, ஜி.வி.பிரகாஷ் குமார், அறிவு குரலில் இந்த பாடல் அமைந்துள்ளது.

கொல்லாதே

லக்கி பாஸ்கர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலாக வெளியான கொல்லாதே என்ற இந்த பாடலை ஆனந்ந் அரவிந்தாக்சன், ஸ்வேதா மோகன் ஆகியோர் பாடியுள்ளனர். ரெமாண்டிக்கான வரிகளுடன் கூடிய இந்த பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

வீர தீர சூரன் டைட்டில் தீம்

விக்ரம் நடிக்க, சேதுபதி, சித்தா படப்புகழ் அருண் குமார் இயக்கி வரும் படம் வீர தீர சூரன். இந்த படத்தின் டைட்டில் டீசர் வெளியாக ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

இதையடுத்து ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில் படத்தின் டைட்டில் டீசர் தீம் மியூசிக்கும் டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

சக்கர முத்தே

ஜி.வி. பிரகாஷ், மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் ரெபல். இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் அமைந்திருக்கும் சக்கர முத்தே என்ற பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணன் எழுத, நவக்கரை நவீன் பிரஞ்சம், கோல்ட் தேவராஜ் ஆகியோர் பாடியுள்ளனர். என்ஜாய்மெண்ட் பாடலாக இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காதலே

துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேபரில்லா ஜோடியாக நடித்து வரும் படம் வருணன் காட் ஆஃப் வாட்டர். இதில் இடம்பிடித்திருக்கும் ரொமாண்டிக் பாடலாக காதலே என்ற பாடல் உள்ளது.

ரேஷ்மன் பாடல் வாரிகள் எழுத ஜிவி பிரகாஷ் குமார், சைந்தவி ஆகியோர் பாடலை பாடியுள்ளனர். சிறந்த மெலடியாக ரசிகர்கள் பாடல் கவர்ந்து வருகிறது

தலைவலி

ஜி.வி. பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் டியர். விண்ணுலக கவி எழுதிய இந்த பாடலை ஜி.வி. பிரகாஷ் குமார் பாடியுள்ளார். துள்ளலான மெலடி பாடலாக ரசிகர்களை இந்த பாடல் கவர்ந்துள்ளது.

ஸ்லீப்பிங் ப்யூட்டி

டியர் படத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ரொமாண்டிக் பாடலாக ஸ்லீப்பிங் ப்யூட்டி உள்ளது. அறிவு பாடல் வரிகள் எழுத சந்தோஷ் ஹரிஹரன் பாடியுள்ளார். இதுவும் அற்புதமான மெலடியாக அமைந்துள்ளது.

காக்கரட்டான்

பொங்கல் திருவிழா கொண்டாட்டத்தை மையப்படுத்தி ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் வெளியாகியிருக்கு மியூசிக் விடியோவாக காக்கரட்டான் பூத்திருச்சு பாடல் உள்ளது. பாடலில் வித்யா வாக்ல், ராஜலட்சுமி, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் பெர்பார்ம் செய்துள்ளனர்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.