Sivakarthikeyan: இது ரொம்ப கனமா இருக்கு! அப்செட்டில் சிவகார்த்திகேயன்... என்ன வச்சு இப்படி பண்ணிட்டிங்களே!
SivakaRthikeyan:நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணியாற்றி வந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், அவர் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்த முடியாமல் அப்செட் ஆகி உள்ளாராம்.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்புகள் திட்டமிட்டபடி நடக்காமல் தொடர்ந்து தாமதமாகி வருவதால், நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களின் திட்டங்களும் தள்ளிப்போவதாக மிகுந்த வருத்தத்தில் உள்ளார் என சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அமரன்- ரொம்ப கனமா இருக்கு
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்திய ராணுவ வீரரான முகுந்தனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சால்பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும், சோனி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.
இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31ம் தேதி திரையரங்கிற்கு வருகிறது. இந்நிலையில், நேற்று படத்திற்கான அறிமுக விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்றார்.
அப்போது பேசிய சிவகார்த்திகேயனிடம், படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளீர்கள். துப்பாக்கியை கையாள்வது சுலபமாக வந்ததா, துப்பாக்கியின் கனம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்,துப்பாக்கி மிகவும் கனமாகத் தான் இருந்தது. படத்தில் துப்பாக்கியை கரெக்டா ஹேண்டில் செஞ்சிருக்கோம்ன்னு நம்பிக்கை இருக்கு. எல்லாரும் ரொம்ப கஷ்டபட்டு வேலை செஞ்சிருக்கோம். எங்களுக்கு அந்த தைரியத்த மொத்தமா கொடுக்க கமல் சார் இருக்கிறார்ன்னு கூறியிருந்தார்.
அடுத்த விஜய்
தமிழ் சினிமாவில் தன்னுடைய அசாத்திய நடிப்பாலே சில படங்களில் நடித்திருந்த போதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தவர் சிவகார்த்திகேயன். இவர் விஜய் பாணியை பயன்படுத்தி பேமிலி ஆடியன்ஸை கவர் செய்தது போல, இப்போது சிறுவர்களையும் தன்னுடைய ரசிகர்களா மாற்றி வருகிறார்.
இந்த நிலையில், முன்னணி நடகராக இருந்தும், நடிகர் விஜய்- இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவான கோட் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில், விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதால், அவருடைய பணியை சிவகார்த்திகேயன் இனி செய்ய வேண்டும் என விஜய் அறிவுறுத்தியது போன்ற காட்சிகள் படத்தில் வைக்கப்பட்டிருக்கும். இதனை ஆராவாராம் செய்து விஜய் மற்றும் சிவகார்த்திகேயந் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.
அப்செட்டில் சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன்-இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸால் மிகுந்த அப்செட்டில் உள்ளார் என கூறப்படுகிறது. அமரன் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வந்தார். இந்தப் படத்திற்காக சென்னையில் நடந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன், வித்யூத் ஜாம்வால், ருக்மணி வசந்த் என பலரும் நடித்து வந்தனர்.
இதற்கிடையே, இயக்குநர் முருகதாஸ், இந்தி நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் படம் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இதையடுத்து, சல்மான் காந், சிவகார்த்திகேயன் என இருவரையும் வைத்து மாறி மாறி படம் எடுத்து வந்த முருகதாஸ், தற்போது சிக்கந்தர் படப்பிடிப்பில் முழுவதுமாக கவனம் செலுத்துகிறார்.
இதனால், நடிகர் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தாமதமாகி வருகிறது. அதுமட்டுமின்றி, முருகதாஸின் திரைப்படத்திற்கு இன்னும் படப்பிடிப்புகளே முடியாததால், அதன் ரிலீஸ் தள்ளிப்போகும். எனவே, சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தின் திட்டம் பெரிதும் பாதிக்கும் என சிவகார்த்திகேயன் அப்செட்டில் இருந்து வருகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்