GOAT: எதிர்பார்த்ததை அளித்த கோட்... தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்... வெளியான மட்ட வீடியோ
GOAT: நடிகர் விஜய்யின் கோட் திரைப்படத்தில் வெளியான மட்ட பாடலின், வீடியோ வெர்ஷனை படக்குழு வெளியிட்டுள்ளது. திரையரங்கில் திரிஷா- விஜய் ஜோடியை கண்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்த நிலையில், இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சினிமாவிலிருந்து ஒதுங்கி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்த நிலையில் வெளியான திரைப்படம் கோட் எனப்படும் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த நிலையில், பாடல்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. இந்நிலையில், இத்திரைப்படத்தில் திரிஷா கௌரவ தோற்றத்தில் மட்ட பாடலுக்கு நடனமாடி இருந்தார்.
மிஷ்கின் பாணியை பின்பற்றிய வெங்கட் பிரபு
வழக்கமாக இயக்குநர் மிஷ்கின் திரைப்படங்களில் வரும் ஐட்டம் பாடல்களிலே அதிகளவு மஞ்சள் நிற உடைகள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், கோட் திரைப்படத்திலும் வெங்கட் பிரபு இந்த பாணியை பயன்படுத்தி இருப்பார். இந்தத் திரைப்படத்தில் தந்தை மகன் என இரண்டு கெட்டப்களில் விஜய் நடித்திருந்த நிலையில், மகன் அதாவது படத்தில் குறிப்பிட்டது படி இளைய தளபதியுடன் திரிஷா ஒரு குத்து பாடலுக்கு நடனமாடி உள்ளார்.