Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?-actor surya advices audience to who care box office collections - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?

Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?

Malavica Natarajan HT Tamil
Sep 23, 2024 10:52 AM IST

Surya: ரசிகர்கள் ஒரு படத்தை பார்க்க திரையரங்கிற்கு சென்றால் படத்தை மட்டும் பார்த்து விட்டு வரட்டும். அந்தப் படத்தின் வசூல் பற்றியோ, விமர்சனத்தைப் பற்றியோ கவலைப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளார்.

Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?
Surya: இதப்பத்தி நீங்க கவலை படாதீங்க... வேலையை மட்டும் பாருங்க... இதெல்லாம் அபூர்வம்... என்ன சொல்கிறார் சூர்யா?

மெய்யழகன்

தமிழில் பெரும் வெற்றி பெற்ற 96 திரைப்படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான திரைப்படம் மெய்யழகன். இத்திரைப்படம் வரும் 27ம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இந்த கண்ணோட்டத்தில் படத்தை பார்க்காதீங்க

இதில் பேசிய நடிகரும் இப்படத்தின் தயாரிப்பாளருமான சூர்யா, " மெய்யழகன் மாதிரியான படங்கள் மிக அரிதாகவே நமக்கு கிடைக்கும். இந்தப் படத்தை அனைவரும் ரசித்து பாருங்கள், அதே சமயத்தில் படத்தை படமாக பாருங்க. அந்தப் படத்தோட கலெக்ஷனை பத்தி கவலைப் படாதிங்க. படத்தை நீங்க ரசிங்க. அதுக்கு அப்புறம் படத்தை பற்றி விமர்சனம் செய்யலாம். விமர்சனம் பண்ணனும்குற கண்ணோட்டத்திலேயே படத்தை பார்க்காதீங்க. படத்தை கொண்டாட மட்டும் நாம் எல்லாரும் தயாராக இருப்போம்" என கூறியுள்ளார்.

மெய்யழகன் படத்தின் ட்ரெயிலர் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. நடிகர் கார்த்திக்கிற்கும் அரவிந்த் சாமிக்கும் இடையிலான அந்த கெமிஸ்ட்ரி நன்றாகவே இருக்கிறது. அரவிந்த் சாமியை கார்த்தி அத்தான், அத்தான் என கூப்பிடுவது பார்பவர்களை கவர்ந்துள்ளது. கார்த்தியின் மெய்யழகன் திரைப்படம் 96 திரைப்படத்தைப் போல ஓர் இரவில் நடக்கும் கதையாகவே எடுக்கப்பட்டுள்ளது என இயக்குநர் தெரிவித்துள்ளார்.

படம் வரும் 27ம் தேதி ரிலீஸாகும் நிலையில், அதற்கான ப்ரமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அதேசமயம் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ரசிகர்கள் அதன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் பற்றி இப்போதே பேசத் தொடங்கி விட்டனர். முன்னதாக நடிகர் ரஜினி காந்தின் வேட்டையன் படத்துடன் நேரடியாக மோத இருந்த கங்குவா திரைப்படம், வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தது.

அப்போது, ரஜினி படத்துடன் மோதினால், படத்திற்கு போதுமான வரவேற்பும் வசூலும் கிடைக்காது. அதனால், படத்திற்கு போட்ட முதலீடுகள் கூட கிடைக்காது என்பதால் தான் கங்குவா வெளியீடு தள்ளிப்போனது என பலரும் கருத்து தெரிவித்த நிலையில், மெய்யழகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி இவ்வாறு பேசியுள்ளார்.

இதற்கு முன்னதாக நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றிலும், சினிமா விமர்சகர்கள் குறித்தும், அவர்கள் சினிமாவை விமர்சனம் செய்யும் விதம் குறித்தும் காட்டமாக பேசியிருந்தார். பலரும் பணம் வாங்கிக் கொண்டு விமர்சனம் செய்வதால், திரையரங்கிற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக வருத்தம் தெரிவித்திருந்தார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner