தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Gautham Vasudev Menon: கெளதம் மேனனுடன் பணிபுரிய வாய்ப்பு! - நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே!

Gautham Vasudev Menon: கெளதம் மேனனுடன் பணிபுரிய வாய்ப்பு! - நீங்கள் செய்ய வேண்டியவை இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Apr 25, 2023 12:14 PM IST

திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவானது இதன் மூலம் திறக்கப்படுகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன்!
கெளதம் வாசுதேவ் மேனன்!

ட்ரெண்டிங் செய்திகள்

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் படங்களில் பாடல்கள் தனி அங்கத்தை வகிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இன்னும் ஒரு படி மேலே போய் சொல்ல வேண்டுமென்றால் அவரின் படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை விட அவரது படங்களில் இடம்பெற்ற பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் அதிகத்திலும் அதிகம்.

‘வசீகரா’ ‘என்னைக்கொஞ்சம் மாற்றி’ ‘ஒன்றா இரண்டா ஆசைகள்’ ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மா மழை’ ‘ முன் தினம் பார்த்தேனே’ ‘பார்த்த முதல் நாளே’ உள்ளிட்ட பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன.

இதனிடையே ‘Ondraga’ என்ற யூடியூப் சேனலை தொடங்கிய கெளதம் இசையமைப்பாளர் கார்த்தி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோருடன் இணைந்து சுயாதீன பாடல்களையும் உருவாக்கி அதில் வெளியிட்டார். இந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் இந்த சேனல் வழியாக கெளதம் மேனன் வாய்ப்பு ஒன்றை திறந்து விட்டு இருக்கிறார். இதை குறிக்கும் வகையில்'For the Love of Music' (Looking to launch the next Mr. X) என்ற புதிய போஸ்டரானது வெளியிடப்பட்டு இருக்கிறது.

திறமையான இசைக்கலைஞர்கள் தங்கள் இசையை அவர்களுக்கு அனுப்புவதற்கான கதவானது இதன் மூலம் திறக்கப்படுகிறது. இங்கு வரும் இசை தொகுப்புகளில் இருந்து 5 இசை தொகுப்புகள் Ondraga சேனலில் இடம்பெரும்.

மேலும் இவற்றில் ஒன்று முழு நீள இசை வீடியோவாகவும் உருவாக்கப்படும். எனவே இப்போது, ​​"Looking for next Mr. X" என்ற டேக்லைன் ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள் மத்தியில் தற்போது சென்சேஷனாகி உள்ளது. Ondraga மூலம் அறிமுகப்படுத்தப்பட இருக்கும் அடுத்த திறமை வாய்ந்த இசைக்கலைஞர் யார் என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்