தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Fan Comment On Shriya Saran

shriya: மனைவி முன்னழகை கமெண்ட் அடித்த ரசிகர்… ஸ்ரேயா சரண் கணவர் என்ன சொன்னார்?

Aarthi V HT Tamil
Feb 23, 2023 12:35 PM IST

shriya saran: நடிகை ஸ்ரேயா சரண் குறித்து ஆபாசமாக கமெண்ட் செய்த ரசிகருக்கு அவரின் கணவர் கூறிய பதில் வைரலாகிறது.

ஸ்ரேயா சரண்
ஸ்ரேயா சரண்

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் அடிக்கடி லைவ் சாட்டில் தொடர்ந்து தனது ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறார். ஸ்ரேயா சரண் சமீபத்திய இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில், ஒரு ரசிகர் "உங்கள் முன் அழகு சூப்பர்" என்று கருத்து தெரிவித்தார். 

அதற்கு ஸ்ரேயா சரண் இதுபோன்ற மோசமான கருத்துகளால் கோபமடையவில்லை. சிரிப்புடன் இருந்தார். லைவ் சாட்டின் போது நடிகை ஸ்ரேயா சரணுடன் உடனிருந்த கணவர் ஆண்ட்ரி கோஷீவ், ரசிகருக்கு காவியமான பதிலை அளித்துள்ளார். 

அந்த ரசிகரின் கருத்தை ஏற்றுக்கொண்ட ஆண்ட்ரே கோஷீவ், தனது மனைவி ஸ்ரேயா சரண் பற்றி இதுபோன்ற மேலும் பல கருத்துக்களை வரவேற்றார்.

அவர் கூறுகையில், ” நீங்கள் சொன்னதை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார். தன் மனைவியை ஒருவர் ஆபாசமாக விமர்சித்தும் அவர் அதை சகஜமாக ஏற்றுக் கொண்டு ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு சினிமாவில் நடித்து திரையுலக பயணத்தை தொடங்கிய ஸ்ரேயா சரண் பின்னர் இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஆங்கில படங்களில் நடித்து பிரபலமானார்.  அவர் ரஜினிகாந்த், விஜய், தனுஷ், நாகார்ஜுனா அக்கினேனி, சிரஞ்சீவி மற்றும் அஜய் தேவ்கன் போன்ற பல முன்னணி ஹீரோக்களுடன் திரை இடத்தைப் பகிர்ந்துள்ளார். 

ஸ்ரேயா சரண் தனது ரஷ்ய காதலரும், தொழிலதிபருமான ஆண்ட்ரி கோஷீவை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த ஜோடிக்கு ராதா என்ற மகள் உள்ளார்.

தொழில்முறை முன்னணியில், ஸ்ரேயா சரண் சமீபத்தில் கன்னட படமான 'கப்ஜா'விற்கான வேலைகளை முடித்துவிட்டார்.  படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'மியூசிக் ஸ்கூல்' என்ற தெலுங்கு-இந்தி இருமொழிக்கான பணிகளையும் முடித்துள்ளார்.

இவர் தமிழில் கடைசியாக 2017 ஆம் ஆண்டு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' திரைப்படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்தார், மேலும் அவர் விரைவில் தமிழில் மீண்டும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்