செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய பிரபல நடிகர்.. கடும் கண்டனம் தெரிவிக்கும் பத்திரிகையாளர்கள்!
செய்தி சேகரிப்பதற்காக நடிகர் மோகன் பாபு வீட்டுக்கு சென்ற செய்தியாளர்களை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கிய மோகன் பாபு மற்றும் அவருடைய பாதுகாவலர்கள்.

நடிகர் மோகன் பாபுவுக்கும், அவரது மகன் மனோஜ் மஞ்சுவுக்கு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுபற்றி செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களின் மைக்கை பிடுங்கி நடிகர் மோகன் பாபு விரட்டி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திராவை சேர்ந்தவர் நடிகர் மோகன் பாபு. தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். மோகன் பாபுவுக்கு தற்போது 72 வயது ஆகிறது. இவர் தெலுங்கு, தமிழ் உள்பட பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருப்பார்.
இரண்டு பேரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார்
மோகன் பாபுவுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தான் மகன் மனோஜ் மஞ்சு மற்றும் நடிகர் மோகன் பாபு இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நடிகர் மோகன் பாபு, அவருடைய மகன் மஞ்ச் மனோஜ் ஆகியோரிடையே சொத்து,, பாதுகாப்பு, குடும்ப கவுரவம் ஆகியவை தொடர்பாக பெரும் பிரச்சனை ஏற்பட்டு இரண்டு பேரும் மாறி மாறி காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர்.